#705 - *நீடிய சாந்தம் என்றால் என்ன? பொறுமையை ஒப்பிடலாமா?*
*பதில்*
தமிழ்
வேதாகமத்தில் 17 இடங்களில் /வசனங்களில் இந்த நீடிய சாந்தத்தை குறித்து பார்க்க
முடிகிறது.
மூல
பாஷையான எபிரேயம் மற்றும் கிரேக்கத்தில் கொஞ்சம் மாறுபடுவதை கவனிக்க முடிகிறது.
1)
யாத்.
34:6 - அவர்: கர்த்தர்,
கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய
சாந்தமும், மகா
தயையும், சத்தியமுமுள்ள
தேவன்.
எபிரேயத்தில்
அரேக் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நீண்ட சிறகுகள் அல்லது பொறுமை அல்லது கோபிக்காமல் நீண்ட காலமாக
பொறுமையை கடைபிடிப்பவர் என்ற அர்த்தத்தில்
சொல்லப்பட்டுள்ளது.
இந்த
அரேக் வார்த்தையை 15 இடத்தில் காண முடிகிறது.
நெகே.
9:17, சங். 103:8, சங்.
145:8, நீதி. 14:29,
நீதி. 15:18,
நீதி. 16:32,
யோவேல் 2:13,
நெகே. 1:2-3, யோனா
4:2, நாகூம்
1:3, யாத்.
34:6, எண்.
14:17, எரே.
15:15, எசே.
17:3, பிர.
7:8
2)
ரோ.
9:23 - தாம்
மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத்
தெரியப்படுத்தவும் சித்தமாய்,
அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய
சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
இந்த
இடத்தில் மக்ரோத்தூமியா / மக்ரோத்தூமியோ என்ற எபிரேய வார்த்தைகளை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு புறநிலை ரீதியாக நீடிய சகிப்புத்தன்மை அல்லது அகநிலை ரீதியாக வலிமை நீண்டகால, பொறுமையை குறிப்பதாகும்.
இந்த
பதத்தை உபயோகப்படுத்தி 14+10 இடங்களில் வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் வேதாகமத்தில் நீடிய சாந்தம் என்றும் நீடிய பொறுமை என்றும் மாறி மாறி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரோ.
2:4, ரோ. 9:22,
2கொரி. 6:6, கலா. 5:22, எபே. 4:2, கொலோ... 3:11-12, 1தீமோ
1:16, 2தீமோ. 3:10, 2தீமோ. 4:2, 1பேதுரு 3:20, 2பேதுரு 3:15, எபி. 6:11, யாக். 5:10 & லூக்கா 18:7, 1கொரி. 13:4, யாக். 5:7, மத். 18:26, மத். 18:29, 1தெச. 5:14, எபி. 6:15, 2பேதுரு 3:9
ஆக
– தவறு செய்தமைக்கு மறுப்பு
உடனடியாக மறுப்பு தெரிவிக்காமல் அல்லது தண்டிக்காமல், எப்படியாயினும் திருந்திவிடுவான்
/ திருந்தி விடுவாள் என்று கோபிக்க தாமப்படுபவர் என்றும் நீண்ட காலம் அமைதியை
காப்பவர் என்றும் சொல்லப்படும் தன்மையுள்ள நம் தேவனை நீடிய சாந்தமுள்ளவர் என்ற
பதம் தெளிவுபடுத்துகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக