#703 - *எப்படி உலக ஞானத்தை பெற்றுக்கொள்வது?* நான் ஏன் இதில்
பின்தங்கியிருக்கிறேன்? என் பாடங்களை படிக்கும் போது ஒரே ஒரு பக்கத்தை
முடிக்க சிரமப்படுகிறேன். இதற்கான பதில் அநேக வாலிபருக்கு பிரயோஜனமாக இருக்கும்.
*பதில்*
ஞானம்
என்பது தேவனுடைய குமாரனின் பெயர்களில் ஒன்றாகும். மத்தியஸ்தராக;
கிறிஸ்துவின் ஞானம். நித்தியத்தின் பண்டைய குடியேற்றங்களில் உடன்படிக்கை
மூலம். (1கொரி
1:24, நீதி 8:1-36)
சற்றே இயற்கைக்கு அப்பாற்பட்டவையாகவும், சரீர
குருட்டுத்தன்மைக்கு எதிராகவும் ஞானம் வேதத்தில் ஒரு வார்த்தையாக
பயன்படுத்தப்படுகிறது
(யாக் 3:14-15).
வேத
வசனத்தை எப்போதும் தியானிப்பதால் தன்னுடைய ஆசிரியர்களை காட்டிலும் தான் ஞானம் நிறைந்தவனாக
இருப்பதாக சங்கீதக்காரன் சொல்கிறார் – சங் 119:99
ஞானத்தில்
குறைவு உள்ளவன் –
தேவனிடத்தில் கேட்ககடவன் என்கிறார் அப்.யாக்கோபு – யாக் 1:5
பள்ளி
பாடமாக இருந்தாலும் உலக அறிவாக இருந்தாலும் அந்த மூல ஆதாரத்தை தருவது தேவனே – ஏசா 50:4, யாத் 35:30-35
அவருக்கு
பயந்து, அவர்
சத்தியத்திற்கு கீழ்படியும் போது உலக ஞானத்தையும் தேவன் தருகிறார் – கொலோ 1:9-10
தேவனுக்கு
கீழ்படியாமல் உலக ஞானத்தை தேடினதால் ஆதாமும் ஏவாளும் தனக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து
லாபத்தையும் இழந்தார்கள் –
ஆதி 3:6-7
தேவனிடத்தில்
தேடாமல் ஞானத்தை வெளியே தேடினால் மேன்மை இழந்து போகும் – யோபு 4:18-21
தேவனிடத்தில்
தேடாமல் சுயமான ஞானம் –
தேவனிடத்தில் நாம் அகப்படுவதற்கு ஏதுவாகும் – யோபு 5:13
தேவனுடைய
வார்த்தையை பிரியத்தோடும் ஆவலோடும் படித்து இரட்சிப்பை காத்துக்கொள்ளும் போது – உலகத்தை ஜெயிக்கிற ஜெயமான
ஞானத்தை தேவன் தந்தருளுவார் –
1யோ 5:5
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும்
பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். *அவன் நீர்க்கால்களின் ஓரமாய்
நடப்பட்டு,
தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற
மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்*. சங் 1:2-3
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக