வெள்ளி, 10 ஜனவரி, 2020

#702 - கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் என்பது என்ன? அவருடைய மகிமை என்பது என்ன?

#702 - *கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் என்பது என்ன? அவருடைய மகிமை என்பது என்ன?*

*பதில்*
*ஆசீர்வாதம்* என்பது தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வெகுமதி.

ஆசீர்வாதம் என்ற வார்த்தைக்கு பொதுவான அர்த்தம் விருப்பம் என்பது.

தேவனிடத்தில் இருந்து வரும் ஆசீர்வாதம் என்பது அந்த வாக்குறுதியை பெற்றுக்கொள்பவர்களுக்கு நடக்கும் நன்மையை குறிக்கிறது. வம்ச விருத்தியை சம்பத்தின் விருத்தியை ஆசீர்வாதம் வழி வகுக்கிறது.

தேவன் ஆதாம் ஏவாளை ஆசீர்வதித்தார் என்று முதல் முதலில் வேதத்தில் ஆதியாகமம் 1ம் அதிகாரம் 22ம் வசனத்தில் ஆசீர்வாதம் என்கிற வார்த்தையை காண முடிகிறது.

ஆசீர்வாதம் இன்னும் மற்றவர் நன்மை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பி சொல்வது ஆதி. 27:4, எண். 6:23

*மகிமை* என்பது தனக்கான மரியாதை, மேன்மை, கவுரவும் போன்றவை.
சுருக்கத்தில் இந்த சொல், கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது.
ஏனென்றால் வேறு எந்த மகிமையும் இருக்க முடியாது.

எனவே தீர்க்கதரிசி சபைக்கு சொல்கிறார் "உன் தேவனே உனக்கு மகிமை என்று"(ஏசா_60: 19)

ஆகவே, யெகோவா தேவன் தனது ஆளுமையில், உண்மையாகவும் கண்டிப்பாகவும் மகிமைப்படுகிறார்.

ஆகையால், கர்த்தர் படைப்பின் மகத்தான செயல்களைப் பற்றி பேசும்போது, ​​வானங்களை உருவாக்கி, அவற்றை நீட்டி, பூமியை பரப்புவதில்; அவருடைய குமாரனால் மீட்பின் அதிசயங்களும்; இயற்கையின் ஒற்றுமை, கிரியை மற்றும் கிறிஸ்துவின் இரட்சிப்பின் ஏற்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்துகிறார்.

வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது: .... கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும் ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசா_42: 5-8.) என்ற இந்த வாக்கியங்களின் ஊடே தேவனைப்பற்றிய மிக உயர்ந்த உறுதிப்படுத்தலை இங்கே காணமுடிகிறது.

ஆகவே ஆசீர்வாதம் என்பதும் மகிமை என்பதும் இரு வேறு பதங்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக