வெள்ளி, 10 ஜனவரி, 2020

#700 - பிறக்கும்போதே நமக்குள் பாவம் வருகிறதே, எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராய் பிறந்தார்?

#700 - *எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராய் பிறந்தார்*?
 
மாம்சீக சரீரத்தை பெற்றுக்கொண்ட ஆதாம் பாவமானான் என்பது நமக்கு தெரியும் அதே போல ஏவாளும் மாமிச சரீரத்தை கொண்டவள் தான். சங்கீதம் 51:5 - இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்று தாவீது சொல்கிறார். இப்படி,  பிறக்கும்போதே நமக்குள் பாவம் வருகிறது.  ஆனால் எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராய் பிறந்தார்?

*பதில்*
என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்ற அந்த சங்கீதம், தாவீது தன்னை தாழ்த்தும் செயலின் வார்த்தைகள்.

இந்த பாடல் (சங்கீதம் 51) முழுவதுமே தன்னுடைய பாவ அறிக்கையின் பாடலாக இருப்பதை கவனிக்க வேண்டும்.

தாவீது தான் செய்த பாவம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணர்ந்ததன் விளைவாக இடிந்து நொருங்கிப் போய், தன் பாவ அறிக்கையை தேவன் முன்னதாக வைக்கிறார்.

தன்னை நியாயப்படுத்தும் நோக்கில் அல்ல, மாறாக ஒப்புதல் வாக்குமூலத்தை நிறைவு செய்வதாகும்.

அவர் சொன்னது போல், நான் இதை ஒரு முறை பாவம் செய்தேன் என்று மாத்திரமல்ல நான் இயல்பிலேயே ஒரு பாவி. என் வாழ்க்கையின் நீரூற்று மாசுபட்டதுடன் அதன் நீரோடைகளும் அப்படியே உள்ளன என்கிறார்.

எனது பிறப்பு-தன்மையே நீதியின் சதுரத்திற்கு வெளியே உள்ளன; நான் இயல்பாகவே தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்கு சாய்ந்து கொள்கிறேன். என்னுடையது ஒரு தன்னிலையான பாவ மனகோட்பாட்டிற்கு ஏற்றபடி சாயும் ஒரு நோயாகிவிட்டது.

என் சரீரமே உமது கோபத்திற்கு அருவருப்பானது. மேலும், நான் கருத்தரித்த நாளில் இருந்தே பாவம் செய்கிறவனை போலானேன் என்று தன் மூலாதாரமே பாவமாயிருக்கிறது என்று தன்னை தேவனுக்கு முன்பாக ஆரம்ப காலத்திற்குத் திருப்பிச் சென்று தாழ்த்துகிறார்.

தனது தாயைக் குற்றப்படுத்துவதில் அல்ல, மாறாக அவர் செய்த பாவத்தின் ஆழமான வேர்களை ஒப்புக்கொள்வதற்காக.

தாவீதின் தாய் கர்த்தருடைய மகள், அவர் ஒரு நல்ல தந்தையின் தூய்மையான பரிசுத்த விவாகத்தில் பிறந்தார்.

கர்ப்பம் உருவாவது தேவனுடைய அநுக்கிரகத்தால். ஒரு குழந்தை பெற்றெடுப்பது தேவனுடைய சுதந்திரம் என்று வேதம் சொல்கிறது (சங் 127:3)

திருமணம் செய்வதும் குழந்தை பிறப்பதும் தேவனுடைய பரிசுத்த திட்டத்தில் விலையேறப்பெற்றவை (ஆதி 1:28)

பிறக்கும் போது எந்த குழந்தையும் பாவத்தில் பிறப்பதில்லை.

பிறக்கும் எந்த குழந்தையும் பரலோகத்திற்கு போகும் பாக்கியம் உள்ள பரிசுத்த குழந்தை.

லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

Mat 18:10 இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எப்போது ஒருவர் நன்மை எது என்று அறிந்து பாவம் செய்ய துவங்குகிறார்களோ அப்போது பாவ கணக்கு அவர்களுக்கு துவங்குகிறது எசே 18:20

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மனுஷனுடைய வித்தினால் அல்ல மத் 1:20

அவர் சிறுவயதிலிருந்தே பாவமில்லாதவராக உத்தமமாய் வாழ்ந்தார் லூக் 2:52

எபி 4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

எபி 7:26 பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

யோ 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.

2கொரி 5:21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 

1பேது 2:22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

1யோ 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக