#701 - *தலையில் பூ வைத்துக்கொள்வதில் ஆவிக்குரிய அர்த்தம் என்ன?*
*பதில்*
தலையில்
பூ வைத்துக்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் கலாசாரத்தை பொருத்தது.
இதற்கு
வேதத்தில் என்ன அர்த்தம் என்று தேடினால் ஒன்றும் கிடைக்காது என்றே நான் சொல்லுவேன்.
எந்த
அலங்காரமும் தகுதியானதாக இருத்தல் அவசியம் – 1தீமோ. 2:9-10
அலங்காரம்
கூடும் போது கவர்ச்சியாகிறது / இச்சையை மற்றவருக்கு தூண்டுகிறது. கவர்ச்சி / இச்சை
பாவத்தை பிறப்பிக்கும் –
மாற்கு 6:22, 24-26, எஸ்தர் 1:10-12, ஏசா. 3:16-26
அதிகமான
அலங்காரம் செய்து கொள்ளும் போது மனதை கட்டுக்குள் வைக்க முடியாமல் பிதற்றுதலுக்கு
காரணமாகி –
பாவத்திற்கு வழிவகுத்தது –
எசே. 16:13-16
தலையில்
பூ வைத்துக்கொள்வது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி.
தன்
கணவனுக்காகவும் குடும்பத்திற்காகவும் தன் நளினத்திற்காகவும் அடக்கமாக அளவாக
மற்றவர்களின் இச்சையை தூண்டாத வண்ணம் பார்த்துக்கொள்வது விசுவாச வாழ்க்கையை
வைராக்கியமாக கொண்டு செல்ல உதவும்.
தலையில்
பூ வைக்க கூடாது என்று யாரும் கட்டாயபடுத்துவது அவரவர் தங்கள் சபை கொள்கையே – பூ வைக்க கூடாது என்ற ஆதாரம் வேதத்தில்
இல்லை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக