புதன், 8 ஜனவரி, 2020

#697 - வாரம் வாரம் தவறாமல் திருவிருந்து எடுக்கும் மக்களுக்கு மட்டும் தான் பரலோகம் கிடைக்குமா?

#697 - *வாரம் வாரம் தவறாமல் திருவிருந்து எடுக்கும் மக்களுக்கு மட்டும் தான் பரலோகம் கிடைக்குமா?*

*பதில்*
பரலோகம் என்பது திருவிருந்தை அடிப்படையாக மாத்திரம் கொண்டுள்ளது அல்ல.

பாவத்திலிருந்து விடுபட்டு தேவ வார்த்தைக்கு கீழ்படிகிறவர்கள் (இரட்சிக்கப்பட்டவர்கள்) பரலோகத்தை சுதந்தரிப்பார்கள் – 1யோ. 5:13, ரோ. 6:23, யோ. 6:47, யோ. 6:54, யோ. 5:39)

கிறிஸ்தவர்கள் - கிறிஸ்துவின் கட்டளைகளில் கடைபிடிக்கவேண்டியவைகளில் ஒன்று - திருவிருந்தில் பங்கெடுப்பது.

தேவனை தொழுது கொள்வதும்
வசனத்தை ஆராய்ந்து பார்ப்பதும்
தங்களை சோதித்தறிந்து சுத்திகரித்துக்கொள்வதும்
பரிசுத்தவான்களுக்கு உதவுவதும்
தரித்திரருக்கு உதவுவதும்
ஜெபிப்பதும், துதிப்பதும், இசைகருவிகளில்லாமல் பாடுவதும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளையாக இருக்கிறது.

மேலே சொல்லப்பட்டவைகள் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுத்தபட வேண்டும் என்றும் கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த முறையில் செய்யாத பட்சத்தில் நாம் அனைத்திலும் ஈடுபட்டாலும் பிரயோஜனமில்லை என்று வேதம் சொல்கிறது !!

ரோ. 8:28 அன்றியும், *அவருடைய தீர்மானத்தின்படி* அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

திருவிருந்து எடுப்பதிலேயே பலருக்கு இன்னமும் குழப்பம் உண்டு.

எத்தனை முறை எடுக்கவேண்டும் / எப்போது எடுக்க வேண்டும் / எப்படி எடுக்க வேண்டும் / ஏன் எடுக்க வேண்டும் என்ற முறைகள் உள்ளது. அப். 20:7, 1கொரி. 11:24-26

திராட்சை ரசத்திற்கு பதிலாக ஆரஞ்ச் பழரசம் பயன்படுத்துகிற அவலத்தையும் ஒரு இடத்தில் கண்டு ஊழியர் விரட்டப்பட்ட அநுபவம் உண்டு !!

இன்றும் ஏராளமான சபைகளில் – திராட்சை ரசத்தை எதற்கு எடுக்கிறோம் என்று அறியாமல் நியாயபிரமாணத்தின் கீழே இருப்பவர்களை என்ன சொல்வது? 1கொரி. 11:25

தொழுகை முறை, பாடல் முறை, ஜெபிக்கும் முறைகள் என்று சகலவற்றையும் மிக நேர்த்தியாக தேவன் வகையறுத்திருக்கிறார். இவைகோதுமைகளில் நாம் பிறழாமல் பின்பற்றும்போது நித்திய ஜீவனுக்கான கவலைபட அவசியமிருக்காது.

வேத முறையை ஒப்பிட்டு பார்த்தால் நாம் ஏதோ புதிய யுக்தியை புகுத்துவதாக ஜனங்கள் ஆச்சரியபடுவார்கள்.

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் கொடுக்க துவங்கின காலத்திலிருந்தே வேதத்திலிருந்து ஜனங்களை தவறாக கற்றுக்கொண்ட ஊழியர்கள் தாங்களும் குழியில் விழுந்து மற்றவர்களையும் இழுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

2தீமோ. 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

மத். 13:26-30 பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, *களைகளும்* காணப்பட்டது.
வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
அதற்கு அவன்: *சத்துரு அதைச் செய்தான்* என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, *இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்*.
*அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக்* கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

சத்தியத்தை அப்படியே பின்பற்றுவோம்.

அந்நிய (சொல்லப்படாத) அக்கினிக்கு இடமில்லை. மோசேயாக இருந்தாலும் பேச சொன்னதற்கு பதிலாக அடித்து தண்ணீர் புறப்பட்டு வந்தாலும் வாக்குதத்தம் செய்யப்பட்ட கானான் கிடைக்காது !!

வாராவாரம் பங்கெடுத்துவிட்டால் மாத்திரம் போதாது கட்டளைகளில் நிலைத்திருப்பது அவசியம்.

5படிகளை பற்றிக்கொண்டு
ஒருவருக்கொருவர் அன்பில்லாமல் பட்சித்துக்கொண்டிருப்பதும்;
சகோதரத்துவம் இல்லாமல் பகைமையோடு இருப்பதும்;
பொிய  கேள்விக்குறி...

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக