#696 - *எருசலேமில் மூடியபடி ஒரு வாசல்
உள்ளதே - இயேசுவின் வருகை மட்டும் இந்த வாசல் மூடியபடி இருக்குமா?* எசேக்கியேல் 45:1-3 வசனத்தை விளக்கவும்.
*பதில்*
நீங்கள்
குறிப்பிடுவது 45ல் அல்ல - 44ம் அதிகாரம் 1-3ம் வசனங்களில் வருகிறது.
எசே. 44:1 பின்பு அவர் என்னை கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்துக்குப்
புறவாசல் வழியே திரும்பப்பண்ணினார்; அது
பூட்டப்பட்டிருந்தது.
எசே. 44:2 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்;
ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
எசே. 44:3 இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி
இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து,
மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான் என்றார்.
இது
தற்காலத்தில் கோல்டன் கேட் (Golden
Gate) அல்லது ஈஸ்டர்ன் கேட் (Eastern gate) என்று ஆங்கிலத்தில் அதாவது தங்க கதவு / கிழக்கு
கதவு என்று சொல்லப்படுகிறது.
எருசலேமில்
அந்த இடத்திற்கு நான் நேரடியாக சென்று பார்த்திருக்கிறேன்.
இஸ்ரேலில்
தற்போது உள்ள யூதர்கள் ஆதி காலத்தில் என்ன தவறு செய்து இயேசுவை கொலை செய்தார்களோ –
இன்று வரை இன்னமும் அதே மன நிலையில் தான் உள்ளார்கள்.
அதாவது, இயேசுவை இரட்சகர்
என்றோ அதாவது கிறிஸ்து என்றோ (மேசியா) அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேசியா
என்பவர் ஒருவர் இனிமேல் தான் வரவேண்டும் என்று
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
மேசியா வந்தாயிற்று என்பதை அவர்கள் ஏற்காமல் தான் இயேசுவை கொலை செய்தார்கள். அவர்
தான் உலக இரட்சகர் என்பதை இன்றும் சுமார் 90சதவீதம் இஸ்ரவேலர்கள் ஏற்கவில்லை.
Joh 1:11 அவர் தமக்குச் சொந்தமானதிலே
வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை
ஏற்றுக்கொள்ளவில்லை.
Act 13:46 அப்பொழுது பவுலும் பர்னபாவும்
தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது
உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ
அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால்,
இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
Isa 53:3 அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்;
அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்;
அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
ரோமர்
பட்டணத்திற்கு பவுல் எழுதும்போது,
இந்த புறக்கணிப்பின் மூலம் புறஜாதியான நமக்கு இரட்சிப்பு உண்டாக
ஏதுவானதால் –
காலத்தை வீணாக்காமல் வேகமாக இரட்சிப்பிற்குள் வரும்படி அழைப்பு விடுக்கிறார்.
ரோ. 11:11 இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள்
என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே
வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
ரோ. 11:12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு
ஐசுவரியமும், அவர்களுடைய
குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும்.
ரோ. 11:13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே
என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில்
சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
ரோ. 11:14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
ரோ 11:15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை
ஒப்புரவாக்குதலாயிருக்க,
அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ?
ரோ. 11:16 மேலும் முதற்பலனாகிய மாவானது
பரிசுத்தமாயிருந்தால்,
பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது
பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.
ரோ. 11:17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த
இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும்
உடன்பங்காளியாயிருந்தாயானால்,
ரோ. 11:18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப்
பெருமைபாராட்டாதே;
பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல்,
வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.
ரோ. 11:19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு
அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.
ரோ. 11:20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன,
நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல்
பயந்திரு.
ரோ 11:21 சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று
எச்சரிக்கையாயிரு.
ரோ. 11:22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும்
பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால்
உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.
ரோ. 11:23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால்
அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்கு
தேவன் வல்லவராயிருக்கிறாரே.
ரோ. 11:24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால்,
சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது
அதிக நிச்சயமல்லவா?
இது
ஒரு புறம் இருக்க:
இந்த
கிழக்கு வாசல் எருசலேம் தேவாலயத்திற்கு (இடித்து தரைமட்டம் செய்யப்படுவதற்கு
முன்னர்) மிக அருகில் இடம் பெற்றது. மேலும் ஒலிவ மலைக்கு மிக அருகில் உள்ள வாசல்
இது.
இயேசு
ஒலிவ மலையில் இருந்து பரமேறினார் என்று நம்பப்படுகிறது – அப். 1:12, மத். 28:16
இயேசு
பரமேறியது போலவே திரும்பி வருவார் என்று தேவதூதர்களால் சொல்லப்பட்டதால் (அப். 1:11)
அவர் அதே இடத்திற்கு திரும்பி வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
வேதத்தின்படி
– நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவானவர் திரும்பி வரும்போது அவரை நாம் பூமியல் எந்த
குறிப்பிட்ட இடத்திலும் அல்ல ஆகாயத்தில் சந்திப்போம் என்ற கூற்றை நினைவில் கொள்ள
வேண்டும். "பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக,
மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,
இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1தெச. 4:17.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக