#695 - *1யோவான் 5:21பிள்ளைகளே நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக்
காத்துக்கொள்வீா்களாக. இவ்வசனம் எவ்வகையான விக்கிரகம் பற்றி கூறுகிறது?
ஒருவரின் பேராசையா, அல்லது வேறு எந்த வகையிலும் உபத்திரவமாக வரும்
செயல்களா? பண்பாடு, கலாச்சாரம்,
நாம் இருக்கும் சமூகத்தோடு ஒத்துபோகுதல் போன்றதா?
*பதில்*
ஐதோலான்
என்ற கிரேக்க வார்த்தையை மூல வாக்கியத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு
படத்தை / உருவத்தை / பொருளை வைத்து வழிபடுவதை
குறிக்கிறது.
இயேசு
என்று ஒரு படத்தை பார்த்தோ
சிலுவையை
பார்த்தோ
இயேசு
என்று ஒரு உருவத்தை பார்த்தோ
அல்லது
மரித்து போன அப்பா / அம்மா / குழந்தை / தாத்தா / பாட்டி / முதலாளி / தொழிலுக்கு
உபயோகப்படுத்தும் வாகனம் என்று யாரையும் அல்லது எதையும் கும்பிடுவது – விக்கிரக ஆராதனை.
தேவன்
ஒருவருக்கு தவிர யாரையும் வணங்க வேதம் அனுமதிக்கவில்லை.
மரியாதையின்
நிமித்தமாக என்று சொல்லி எந்த பெரியவர்கள் காலிலும் விழகூடாது. அதுவும் விக்கிரக
ஆராதனைக்கு ஒப்பானது - வெளி. 22:8-9, வெளி.
19:10, அப்.
10:25-26, அப்.
14:11-15.
பொருளாசையை
விக்கிரகம் என்று பவுல் விவரிப்பதை இந்த இடத்தில் கவனிக்காமல் இருக்க முடியாது – கொலோ. 3:5
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக