வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

#384 - பவுலும் பர்னபாவும் ஏன் பிரிந்தனர்?

#384 - *பவுலும் பர்னபாவும் ஏன் பிரிந்தனர்?*

*பதில்* :
சவுல் என்ற பவுல் - கிறிஸ்தவர்களை மிகவும் கொடூரமாக துன்புறுத்தியவர். (அப். 9:1-2)

அவர் கிறிஸ்துவுக்குள் வந்தபின் எருசலேம் சென்ற போது சகோதரர்கள் பவுலை சேர்த்துக் கொள்ள பயந்தார்கள். (அப். 9:26)

ஆனால் பர்னபா என்பவன் பவுலை சேர்த்துக் கொண்டு மற்ற அப்போஸ்தலரிடத்தில் பவுல் இரட்சிக்கபட்டதையும் கிறிஸ்துவால் தெரிந்து கொள்ளப்பட்டதையும் விவரித்து சொல்ல – பவுலுக்கும் பர்னபாவிற்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. (அப். 9:27).

அவர்களின் முதல் மிஷனரி பயணத்தில், பர்னபாவின் இனத்தானாகிய யோவான் என்றழைக்கப்படும் மாற்குவை அவர்களுடன் கூட்டி சென்றனர் (கொலோ. 4:10).

ஆயினும், பாதி வழியிலேயே, மாற்கு எருசலேமில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்ப போக முடிவு செய்தார் (அப்போஸ்தலர் 13:13, 15:38). ஏன் திரும்பி போனார் என்ற விவரம் வேதத்தில் சொல்லப்படவில்லை.

பின்னர், இரண்டாவது முறையாக மிஷனரி பயணத்திற்கு திட்டமிடப்பட்டபோது(அப் 15:36), பர்னபா தன் இனத்தானாகிய மாற்குவை தங்களோடு வரும்படியான ஒரு உதவியாளராக கொண்டு செல்ல முன்மொழிந்தார். ஏற்கனவே பாதியில் திரும்பின காரணத்தால் இந்த முறை பவுல் இந்த யோசனைக்கு சம்மதிக்கவில்லை. (அப். 15: 36-41).

இதனிமித்தம் தங்களுக்கும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாமல் – பவுல் தனக்கு உதவியாளராக சீலாவையும், பர்னபா தனக்கு உதவியாளனாக மாற்குவையும் கூட்டிக் கொண்டு இரண்டு பக்கங்களில் சென்றனர் (அப். 15:39-40)

பவுலும் பர்னபாவும் – கொள்கையில் பிரியவில்லை மாறாக தங்களுக்கான உதவியாளரின் தெரிந்தெடுத்தலில் வித்தியாசம் வந்தது.

ஆனால் இதே பவுல் – பல வருடம் கழித்து மாற்குவை தனக்கு மிகவும் பிரயோஜனமுள்ளவன் என்று சான்றிதழ் கொடுக்கிறார் என்றால் – மாற்கு தன் போக்கிலிருந்து மனந்திரும்பியதை காண்பிக்கிறது (2தீமோ. 4:11)

கிறிஸ்தவர்களுக்குள்ளே /  ஊழியர்களுக்குள்ளே கொள்கை ரீதியான அல்லது உபதேச ரீதியான எந்த வித்தியாசமும் வரகூடாது. அப்படி வந்தால் வேதத்தை இருவரில் ஒருவர் இன்னும் முறையாய் படித்தல் அவசியம்.

இந்த காலங்களில் – தங்கள் வயிறு நிரம்புவதில் குறியாய் இருப்பவர்கள் சத்தியத்தை அறிந்தாலும் – மனந்திரும்பி தன் மந்தைக்கு வெளிச்சத்தை காண்பிக்க மறுக்கிறார்கள் (பிலி. 3:19)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக