*பதில்*
இந்த கால சூழ்நிலையில் இந்த கேள்வியை கேட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
2கொரி. 3:7 எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
2கொரி. 3:15 மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
அழிந்து போன அல்லது மரணத்திற்கேதுவான ஊழியத்தை செய்த மோசேயினுடைய முகமே பிரகாசமாக இருந்தால் நித்திய காலத்திற்கான ஊழியத்தை செய்யும் நாம் எவ்வளவு மகிமையுள்ளவர்கள் என்று கேட்கிறார் பவுல் – 2கொரி 3:8
ஆனால் பாவம் – தற்கால பண ஆசையுள்ள வேதத்தை சுமக்கும் கூலிகளுக்கு இந்த அர்த்தம் புரியாமல் இன்னமும் தங்கள் மந்தையை ஆதாயத்தொழிலுக்காக பயன்படுத்தி தான் கெடுவது மாத்திரமல்லாமல் தங்கள் மந்தையையும் நியாயபிரமானத்திற்கு கீழ்படிய வேண்டும் என்று சொல்லி கெடுத்துப்போடுகிறார்கள்.
1தீமோ. 1:7 தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
பிலி. 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
பிலி .3:19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
மோசேயின் ஆகமங்கள் (நியாயபிரமாணம்) வாசிக்கப்படும் போதோ ஆராதிக்கும் போதோ தலையை மூடிக்கொள்வது அவர்கள் மரபு – எசே. 44:17-18
புதிய ஏற்பாட்டில் பவுல் மிகவும் இதை தெளிவு படுத்துகிறார். மனைவிக்கு தலை புருஷன், புருஷனுக்கு தலை கிறிஸ்து, கிறிஸ்துவிற்கு தலை பிதா என்று – 1கொரி. 11:3.
ஆகவே புதிய ஏற்பாட்டில் தொழுகையின் போது ஆண்கள் தொப்பியையோ குல்லாக்கலையோ முக்காடோ போடகூடாது. அது கிறிஸ்துவை அவமதிப்பதாகும்.
இந்த தலைகவசத்தை பவுல் 15ம் வசனத்தில் விளக்குகிறார். பரிதாபமாக, இந்த அர்த்தத்தை உணராமல் ஆவியானவர் வந்தால் விடுதலை ஆகவே எல்லாரும் ஆர்ப்பரியுங்கள் என்று திடீரென்று ஒலி பெருக்கியில் கத்தி ஜனங்களை பரவசப்படுத்த முயற்சிக்கிறார்கள் அநேகர். 2கொரி. 3:17
விடுதலை என்பது முக்காட்டிலிருந்து – அதாவது நியாயபிரமாணத்திலிருந்து சுயாதீனப்பிரமானத்திற்கு என்பதை அறிய வேண்டியது. 2கொரி. 3:16, கலா. 2:4, 4:31, 5:1, 5:13
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக