ஞாயிறு, 5 ஜனவரி, 2020

#691 - எபிரேயர் 13:8 - இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். விளக்கவும்

#691 - *எபிரேயர் 13:8  - இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். விளக்கவும்*
 
*பதில்*
இதில் என்ன சந்தேகம் என்று புரியவில்லை.

இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னரே இயேசு கிறிஸ்து இருந்தாரா என்று ஒரு வேளை உங்களுக்கு கேள்வி எழுந்தால் – நிச்சயம் அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பு இருந்தார்.

ஆதியிலே அவர் வார்த்தையாக இருந்தார் யோ 1:1
 
வார்த்தையானவர் மாம்சமாகி உலகத்தில் வந்தார் யோ 1:14, 1தீமோ 3:16
 
குமாரன் கோபஞ்கொள்ளாமல் அவருக்கு கீழ்படியுங்கள் என்று சங்கீதத்தில் வாசிக்கிறோம் சங் 2:12
 
"இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றும் ஒரே மாதிரியாக இருக்கிறார்", அதாவது அவர் மாறாதவர் என்பது ஒரு முழுமையான கருத்தாகும்.
 
இந்த சுயாதீனமான முன்மொழிவின் தெளிவான வடிவமைப்பு என்னவென்றால், தங்கள் இரட்சகர் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பதைக் காண்பிப்பதன் மூலம் விடாமுயற்சியுடன் அவர்களை ஊக்குவிப்பதே; முந்தைய காலங்களில் தனது மக்களைத் தக்கவைத்தவர், அப்படியே இருந்தார், என்றும் எப்போதும் இருப்பார்.
 
எனவே, இங்கே வாதம் விடாமுயற்சியானது மீட்பரின் "மாறாத தன்மை" மீது நிறுவப்பட்டுள்ளது.
 
அவரது தன்மை மற்றும் திட்டங்களில் மாற்றமோ அல்லது கூடுதல் தகவலோடு மறுபடியும் ஒரு ஏற்பாட்டையோ கொண்டு வருவதில்லை. இனி அவர் வரும் போது தான் சொன்னவற்றிற்கு கீழ்படியாதவர்களை நியாயந்தீர்க்க வருகிறார் 2தெச 1:7-8
 
அவர் நம் பாவத்திற்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி, நமக்காக தேவனின்முன்னிலையில் தொடர்ந்து பரிந்து பேசுகிறவர்.  1யோ 2:1
 
அவரே வழி, சத்தியம், ஜீவன். பிதாவினிடத்தில் அவராலேயன்றி வேறு யாரும் நேரடியாக செல்லமுடியாது யோ 14:6
 
மாறாத இரட்சகரின் வார்த்தைக்கு கீழ்படிந்து பாவங்கள் போக கழுவப்பட வேண்டியது அவசியம் அப் 22:16.
 
இத்தனை திரளான சாட்சிகள் இருந்தும் தேவன் என்னோடு பேசட்டும் பின்னர் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளலாம் என்று வஞ்சிக்கப்பட்டு விடாதீர்கள் பாவங்களை கழுவிக்கொள்ள இன்றும் நேரம் உள்ளது எபி 4:7
 
என்றும் மாறாத கிறிஸ்து தான் சொன்னது போல மீண்டும் வரும்போது ஆயத்தமாயிருப்போம்.
 
 *எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக