#690 - *இன்று சபையில் இருப்பவர்களும் தியேட்டர் சினிமா என்று ஆட்டம் பாட்டமா இருக்காங்க*. விஜய் என்கிற ஒருவர் கர்த்தர் பிள்ளை என்று இன்றைய இளைஞர்கள் அவரின் மோகத்தில் சீர் அழிகின்றனர் இவர்களைக்குறித்து வேத விளக்கம் தாங்க ஐயா
*பதில்*
சபை ஆராதனை என்கிற பெயரில் எல்லா சினிமாயுக்திகளும் வந்து பல வருடங்களாகி விட்டது.
சினிமா பாடலுக்கு இணையாகவும் அதை மிஞ்சியும் தேவனை துதிக்கும் பாடல் என்கிற பெயரில் தங்களை அழகாகவும் மிணுக்காகவும் உடல் பாவனைகளையும் ஆடலையும் பாடலையும் பாடி ஆடி வெளிவரும் அத்தனையும் தேவ நாமம் மகிமைபடுவதாற்காகவா அல்லது தங்கள் வியாபார லாபத்திற்காகவா என்பதை அனைவரும் அறிவர்.
சொந்த குரல் சரியில்லை என்று வேறொரு நல்ல பாடகரை வைத்து பாடுகிறவர்கள் - யார் தேவனை துதிக்கிறார்கள் என்று கற்றுக்கொள்ள வேண்டும்?
ஆராதனை என்ற பெயரில் சபை தொழுகையில் இசை கருவிகளின் ஆதிக்கம், டான்ஸ் ஆட்டுவிப்பவர்களின் அறிமுகங்கள், ஆடி கூத்தாடுபவர்கள் என்று இவை அனைத்திற்கும் புதிய ஏற்பாட்டு வேத முறை எதிரானவையே.
தேவனுக்கு பயப்படும் பயமும் நடுங்கும் நடுக்கமும் எங்கே போனது?
இவர்கள் தேவன் பெயரில் கூடினாலும் – அங்கு தேவன் இருக்க மாட்டார் என்று வேதம் தெளிவுபடுத்துகிறது - யூதா ஜனம் இப்படி ஒரு நிலையை அடைந்த போது – (எரே. 8:4-17) ஆண்டவர் அவர்களை தண்டிக்க *தவறவில்லை*.
சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்ற வசனத்தை நினைவில் கொள்வோம். (ஏசா. 66:2)
கிறிஸ்தவன் என்று தன்னை ஒருவன் அழைத்துக்கொள்வதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்படிய வேண்டும்.
அது சினிமா ஸ்டார் ஆனாலும் அரசியல் தலைவர் ஆனாலும் – தான் ஒரு கிறிஸ்தவன் என்று வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லாதவனை குமாரனும் தன் பிதாவின் முன்பாக மறுதலிப்பார் – மத். 10:33
கிறிஸ்துவை பின்பற்ற நினைப்பவர்கள் –புதிய ஏற்பாட்டு சத்தியித்திற்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் இரட்சிப்பின் இழப்பு நேரிடும் –லூக்கா 13:3, யோ. 15:4
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக