*பதில்*
இந்த
கேள்வி எழுவதற்கான காரணம் என்னால் யூகிக்க முடியவில்லை.
ஒருவேளை
– ஒரு சபையில் இருப்பவர்கள் அவரவர் தங்களை சகோதரன் சகோதரி என்று அழைத்துக்கொள்வதால்
எப்படி மணவாட்டி அல்லது மணவாளனை தெரிந்தெடுப்பது என்ற கோணத்தில் இந்த கேள்வி
எழுப்பப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
கிறிஸ்துவுக்குள்
ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிக்ள் தான் – மத் 23:8
வயதானவரை
அங்கிள் என்றும் ஆண்டி என்றும் தற்கால சபையில் சொல்லி பழக்கிவிடுவதால் இந்த குழறுபடிகள்
என்று தோன்றுகிறது. தகப்பன் என்றும் அங்கிள் ஆண்டி என்றும் மரியாதைக்கு
அழைத்தாலும் – கிறிஸ்துவுக்குள் அவர்களும் சகோதர சகோதரிகளே – 1தீமோ 5:1
எத்தனை
வயதானவராக இருந்தாலும் அவர்கள் சகோதரன் சகோதரி என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
நம்முடைய
பரலோக பிதாவும் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவுமானவர் ஒரே ஒருவர்
என்பதால் இயேசு கிறிஸ்துவும் நமக்கு மூத்த அண்ணன் என்று வேதம் சொல்கிறது (எபி
2:11-12, மத் 12:48-49;
மத்
25:40; மத் 28:10; லூக்கா 8:21; யோ 20:17, ரோ 8:29)
சொந்த
கூடுகையானாலும் மற்ற பிராந்திய சபையினரானாலும் அனைவரும் ஒரே இரத்தத்தினால்
ஏற்படுத்தப்பட்ட படியால் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகள் – எபே 4:25, 1தீமோ 6:2,
கொலோ 3:11, அப் 17:26.
ஆகவே
– சொந்த சபையில் ஒரு மணவாளனையோ மணவாட்டியையோ பெற்றோரால் தேர்ந்தெடுப்பதில் எந்த உபதேச
குளறுபடிகளும் இல்லை.
ஆனால்
– காதல் வயப்படுவது என்பது பெரும்பாலும் சரீர கவர்ச்சியிலும் வயது முதிர்வின்மையினாலும் வந்துவிடும். அப்படிபட்ட
தொடர்பானது சபையில் கூடும் மற்றவரின் கவனத்தில் படாமல் இருக்காது. அவை மற்றவருக்கு
இடைஞ்சலை கொடுக்காமல் இருக்காது – பிலி 1:11, 1கொரி 10:33.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக