வெள்ளி, 3 ஜனவரி, 2020

#688 - பரிசேயர்கள் சதுசேயர்கள் பழைய ஏற்பாட்டில் எங்குமே சொல்லப்படாத போது புதிய ஏற்பாட்டில் எப்படி வருகிறார்கள்?

#688 - *பரிசேயர்கள் சதுசேயர்கள் பழைய ஏற்பாட்டில் எங்குமே சொல்லப்படாத போது புதிய ஏற்பாட்டில் எப்படி வருகிறார்கள்?*

*பதில்*
புறஜாதிகளினிடமிருந்தும் வேறு எந்த அசுத்தமானவைகளினிடமிருந்தும் பிரித்து எடுப்பதற்கான முயற்சி நடந்ததாக செருபாபெல் மற்றும் எஸ்றாவின் காலத்தில் தெளிவான அழைப்பு இருந்ததை குறிக்கும் சில வசனங்களை வேதத்தில் (பழைய ஏற்பாட்டில்) காண முடிகிறது.

எஸ்றா 6:19-22
“சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள். ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து, புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

நெகே. 9:1 அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள். இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.

யூத மதத்திற்குள் ஒரு பிரிவினருக்கு "பரிசேயர்கள்" என்ற பெயர் உண்மையில் எப்போது வழங்கப்பட்டது என்பது முற்றிலும் தெளிவாகத் கணிக்கமுடியவில்லை என்றாலும், இந்த ஆரம்ப காலங்களில் அசுத்தத்தைப் பற்றிய கடுமையான பார்வையைக் கொண்டு சட்டத்தைப் பாதுகாக்க விரும்பியவர்கள் இருந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரவேலின் பெரும் பகுதியை புறஜாதிகளின் அசுத்தத்திலிருந்தே பாதித்ததாக அவர்கள் நம்பினார்கள்.

சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் யூத மதத்தின் உள் வளர்ச்சியைத் தீர்மானிக்க ஆசாரியர்களும் வேதபாரகர்களும் முயன்றபோது, ​​அவர்கள் தேவனுடைய பரிந்துரைத்தபடி புறஜாதிகளினரின் வழிகளிலிருந்து மேலும் மேலும் பிரிந்தார்கள்.

மக்காபியன் காலத்தில், யூத மதத்திற்குள் உள்ள குழுக்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக முரண்பட்டன. அவர்களிடமிருந்து இரண்டு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆசாரியர்களின் அணிகளிலிருந்து சதுசேயர் என்ற பிரிவும், வேதபாரகர் அணிகளிலிருந்து பரிசேயர் என்ற பிரிவும் வந்ததாக சரித்திரம் சொல்கிறது. பரிசேயர்கள் சட்ட சிக்கல்களிலும், சதுசேயர்கள் தங்கள் சமூக நிலைப்பாட்டிலும் அதிக அக்கறை கொண்டிருந்தனர்.

கிரேக்க காலத்தில், மக்களின் பிரதான ஆசாரியர்களும் ஆட்சியாளர்களும் சட்டத்தை புறக்கணிக்கத் தொடங்கினர்; பரிசேயர்கள் தங்களை ஒன்றிணைத்து, சட்டத்தின் உன்னிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமையைச் செய்த ஒரு சங்கமாக மாறியது.

அவை ஜான் ஹிர்கான்ஸின் காலத்தில் (கிமு 135-105) "பரிசேயர்கள்" என்ற பெயரில் தோன்றுகின்றன. மக்காபீஸின் பக்கத்தில் இல்லாமல் அவர்களுக்கு எதிரான விரோத எதிர்ப்பில் காணப்பட்டார்கள்.

தேச சட்டத்திற்கு கீழ்படியாமல் தங்கள் அரசியல் அதிகாரத்தை மக்கள் மத்தியில் விரிவாக்கி தங்களை முக்கியபடுத்தி வளர ஆரம்பித்தனர்.

இவ்வாறு யூத மக்கள் மத்தியில் பரிசேயர்கள் தேசத்தின் தயவைப் பெற துவங்கினர். அலெக்ஸாண்ட்ரா மகாராணி இவர்கள் மத அதிகாரத்தை அங்கீகரித்து தனது மக்களுக்கு மத்தியில் சமாதானத்திற்கு வழிவகுத்தார்.  

அலெக்சாண்டர் ஜானேயஸ் அவர்களை பட்டயத்தால் அழிக்க முயன்ற போதிலும், பரிசேயர்களிடம் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முடியவில்லை.

இது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்து யூத உள் விவகாரங்களின் முழு நடத்தையையும் பரிசேயர் தங்கள் கைகளில் கொண்டு வருவதற்கு பயன்பட்டது.

ஹிர்கானஸால் தள்ளி வைக்கப்பட்ட பரிசேயர்களின் அனைத்து ஆணைகளும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் அவை தேசத்தின் பொது வாழ்க்கையை முழுமையாக ஆட்சி செய்ய உதவியது.

ரோமானியர்கள் மற்றும் ஏரோதியர்களின் கீழ் அரசாங்கத்தின் மாற்றங்களுடன் கூட பரிசேயர்கள் தங்கள் ஆன்மீக அதிகாரத்தை பராமரித்தனர்.

சதுசேயர்கள் சனகெரிப் சங்கத்தின் பிரதான இடத்தை பிடித்துக்கொண்டிருந்தாலும் பொது விவகாரங்களில் தீர்க்கமான செல்வாக்கு பரிசேயர்களின் கைகளில் இருந்தது.

மேற்கூறிய தகவலின் மூல ஆதாரம் : -Schurer, History of the Jewish People in the Time of Christ, Part. 2, 2:28). Edinburgh: T. & T. Clark, July 1987..

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக