செவ்வாய், 31 டிசம்பர், 2019

#682 - விசுவாசிகளுக்கு எருசலேம் நகரம் முக்கியமானதா?

#682 - *விசுவாசிகளுக்கு எருசலேம் நகரம் முக்கியமானதா? வசனத்தோடு விளக்கவும்.*

*பதில்*
தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தங்களை வழங்கியிருந்தார் - ஆதியாகமம் 12: 1-3; 15:18

வாக்குத்தத்தத்தில் மூன்று அடிப்படை கூறுகள் உள்ளன:
நிலம், தேசம், மற்றும் அந்த முழு தேசத்திற்குமான ஆசீர்வாதம்.

ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட இந்த பண்டைய வாக்குதத்தங்களை தேவன நிறைவேற்றுவதற்காக நவீன இஸ்ரேல் தேசமானது பாதுகாக்கப்பட வேண்டும் என்று இன்றைய மக்கள் நம்புகிறார்கள்.

ஆனால் ஏற்கனவே தேவன் இந்த வாக்குதத்தங்களை நிறைவேற்றினார் என்று வேதம் கற்பிக்கிறது - எபி. 6: 13-18

இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்து யோசுவாவின் நாட்களில் கானான் தேசத்தை அவர்களுக்குக் தேவன் கொடுத்தபோது தேசத்தின் (நிலம்) வாக்குறுதி நிறைவேறியது.

தேவன் அதை நினைவுகூர்ந்தார் - யாத்திராகமம் 6: 4-8

தேசத்திற்குள் நுழைந்து இஸ்ரவேலர்கள் சுதந்தரித்துக்கொள்ள வேண்டிய வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்தார் - உபாகமம் 1: 6-8

அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்கள் - யோசுவா 11:23

தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த வாக்குத்தத்தமானது *முழுவதுமாக நிறைவேற்றப்பட்டது* - யோசுவா 21: 43-45

இஸ்ரவேலுக்கு தேவன் கொடுத்த மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.

இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாதபோது அதை அழிப்பதாக தேவன் வாக்குறுதி அளித்தார் - லேவி. 26: 27-39

அவர்கள் தேசத்திலிருந்து விரட்டப்படுவது - உபாகமம் 4: 25-28

அவர்கள் ஒரு தேசமாகவே அழிந்து விடுவது - உபாகமம் 8: 19-20

தேவன் சொன்னது போல இவை அனைத்தும் நடந்தன.

நீண்ட காலமாக சகிப்புத்தன்மையை தேவன் கொண்டிருந்த போதிலும், இஸ்ரேல் தேவனுக்கு எதிராக கடுமையாக பாவம் செய்தது. ஆகவே வடக்கு பகுதியினர் (இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டவர்கள்) நிலத்திலிருந்து அகற்றப்பட்டனர் – 2இரா. 17: 7-18

மீதமுள்ள கோத்திரமும் பாவம் செய்தபோது, ​​அதுவும் அகற்றப்பட்டது – 2இரா. 23: 26-27

ஆயினும், இரண்டாவது சிறைப்பிடிப்பு 70 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என்று தேவன் தம் கிருபையால் உறுதியளித்தார்.

முழு தேசமும் மீட்டெடுக்கப்படாது, ஆனால் மீதமுள்ளவர்கள் நிலத்திற்குத் திரும்புவர் என்றார் - எரேமியா 25: 8-13; ஏசாயா 10: 20-23

எஸ்ரா, செருபாபேல் மற்றும் நெகேமியா மக்களை இஸ்ரவேலுக்குத் திருப்பியதால் இதுவும் நிறைவேறியது.

உடைந்த ஜாடி சரிசெய்யப்பட்டாலும் ஒருபோதும் இருந்ததைப் போல முழுமையடையாது - எரேமியா 19: 7-13

தேவன் தனது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார் என்பதை நாம் அறியவேண்டும்.

இப்போது நாம் பார்க்கும் நவீன இஸ்ரேல் (எருசலேம்) வேதத்தில் நாம் பார்க்கும் இஸ்ரேல் தேசம் போன்றது அல்ல. பெயர் மாத்திரமே பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று சொல்லும் அளவிற்கு – அனைத்து கோத்திரங்களும் சிதறடிக்கப்பட்டாயிற்று.

வேதாகம கால இஸ்ரேலுக்கும் நவீன கால இஸ்ரேலுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவும்.

*ஓப்பீடு : வேதாகம கால இஸ்ரேல்* 
*x  நவீனகால இஸ்ரேல்*


1) மோசேயின் சட்டங்களால் நிர்வகிக்கப்பட்டது
யாத்திராகமம் 19: 5-7; உபாகமம் 30: 1-10; எஸ்ரா 7:10; நெகேமியா 8: 1-18
x
அடிப்படை சட்டங்களின் தொகுப்பால் நிர்வகிக்கப்படுகிறது

2) ஒரு அரசனால் ஆளப்பட்டது 1சாமுவேல் 8: 4-22
x
அரசாட்சி அல்லது முடியாட்சி அல்ல எரேமியா 22: 28-30

3) வாக்குறுதியளிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் கையகப்படுத்தியது 1இரா. 4:21
x
வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது

4) எருசலேமில் தேவாலயம் 1இரா. 8: 1-10
x
எருசலேமில் தேவாலயம் இல்லை - இடித்து தரைமட்டமானது.

5) லேவியரகளின் ஆசாரியத்துவம் எண். 3: 6-10
x
ஆசாரியத்துவம் முடிவுற்றது

6) கோத்திரங்களின் அடையாளம் 2சாமு. 5: 1-3
x
அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத அல்லது நிரூபிக்க முடியாத தற்போதைய கலப்பு ஜனம்.

*மேலும் – நித்தியகாலமாக என்று நாம் நினைத்துக்கொண்டு வேதத்தில் படிக்கும் சம்பவங்கள் நிறைவுற்றதை கீழே கவனிக்கவும்*.

1) விருத்தசேதனம் - ஆதியாகமம் 17: 11-14
@ கலாத்தியர் 5: 1-6; 6:15

2) பஸ்கா - யாத்திராகமம் 12:14
@ கொலோசெயர் 2: 16-17

3) ஆரோனின் ஆசாரியத்துவம் - யாத்திராகமம் 26: 9; 40:15; எண்கள் 25:13
@ எபிரெயர் 7: 11-17

4) பாவநிவிர்த்தி நாள் - லேவியராகமம் 16:29, 31, 34; 23:31
@ எபிரெயர் 9: 23-28; 10: 1-12, 18

5) நீதியான கட்டளைகள் - சங்கீதம் 119: 151-152, 160
@ கலாத்தியர் 3: 24-25; எபிரெயர் 9:10

6) நில உடைமை - ஆதியாகமம் 13: 14-17; 17: 7-8; 1 நாளாகமம் 16: 16-18; சங்கீதம் 105: 9-11
@ உபாகமம் 28: 45-46; 1நாளாகமம் 28: 9

7) ஓய்வு நாள் ஆசரிப்பு - யாத்திராகமம் 31: 16-17
@ கொலோசெயர் 2: 16-17

8) பூமி - சங்கீதம் 78:69; பிரசங்கி 1: 4
@ II பேதுரு 3: 7, 10-12

** * ** புதிய ஏற்பாட்டு காலத்தில் – எந்த இடத்திற்கும் - பகுதிக்கும் – நாட்டிற்கும் – தேசத்திற்கும் முக்கியத்துவம் இல்லை. அனைவரும் தேவனுடைய பார்வையில் சமமாக இருக்கிறோம்.

காலாவதியான நிறைவேற்றப்பட்ட வாக்குதத்தங்களை அறியாமலும் உணராமலும் ஜனங்களுக்கு போதித்து – சாதகமாக, தற்கால எருசலேமை சதுர அடி விலைபேசி பண முதலைகள் வியாபாரமாக்கிக் கொண்டிருப்பதில் அகப்பட்டுக்கொள்ள வேண்டாம்.

தேவன் தன் குமாரனை அனுப்பும் போது – அனைத்து கண்களும் காணும். எருசலேமில் கூடாரம் போட்டு முழங்காலில் நின்று காத்துக் கொண்டிருந்தாலும் சரி, தென் இந்தியாவின் கடைபகுதியில் ஒரு குடிசை கூட இல்லாமல் மரத்தடியில் இருக்கும் ஒருவரானாலும் சரி – அணைத்து கண்களும் காணும் – வெளி. 1:7

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக