#680 - *ஜீவ தண்ணீர் என்றால் என்ன என்பதை கொஞ்சம்
விளக்குங்கள்*
*பதில்*
தேவன்
தாமே ஜீவத்தண்ணீர் என்று குறிப்பிடுகிறார் – எரே. 2:13, எரே. 17:13, சங். 36:9, வெளி. 22:1
தேவ
ஈவை அறிந்திருந்தால், நீங்கள்
அவரிடம் கேட்டிருப்பீர்கள்
என்று இயேசு தன்னை குறித்து சொன்னார் - யோ. 4:10.
தேவ
ஆவியானவரை ஜீவத்தண்ணீர் என்று யோ. 7:37-39ல் குறிப்பிடுகிறார் இயேசு கிறிஸ்து.
...
இயேசு நின்று,
சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில்
வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன்
எவனோ,
அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை
விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார் - யோ. 7:37-38
தன்னிடத்தில்
வருகிறவர்கள் அந்த ஜீவத்தண்ணீரை பெற்றுக்கொள்வார்கள் என்றார். அதாவது தேவ
வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது –
வார்த்தையானது நம்மில் கிரியை செய்கிறது.
எப்போது
அவர் வார்த்தையை விசுவாசித்து மனந்திரும்பி அவர் கட்டளைக்கு கீழ்படிகிறோமோ தேவ ஆவியானவரின்
பெலம் நம்மை ஆட்கொள்கிறது (அப். 2:38-39) ஒருபோதும் தாகமடைவதில்லை.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக