#675 - *ஆண்டவர் மத்தேயு 5:16ல் சொல்லும் நற்கிரியைகள் என்றால் என்ன?*
அல்லது ஆவியின் கனிகள் (கலாத்தியர் 5:22,23)
மாத்திரம் தான் நற்கிரியைகளா? - விளக்கவும்
*பதில்*
செய்யப்படும்
எந்த நல்ல காரியமும் சொந்த பெயரை பெருமை படுத்துவதாக இல்லாமல் அதாவது சொந்த செல்வாக்கை காண்பிப்பதற்கான நோக்கமாக
நம் செயல்கள் காணப்படாமல்
(மத். 6:1) பரலோகத் தகப்பன் மகிமைப்படுத்தப்பட வேண்டும்.
பரிசேயர்கள் மனிதர்கள் தங்களை பார்த்து பாராட்டும்படி செயல்பட்டார்கள்.
மக்கள் அவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில்
சிறிதும் அக்கறை காட்ட மாட்டாமல்
- தேவனை மகிமைப்படுத்துவதற்காகவே உண்மையான
கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டும்.
தேவ
நாமம் மகிமைபடும்படியான எந்த செயலும் நற்கிரியைகள் (1கொரி. 10:31, கொலோ. 3:17)
மேலும்
நற்கிரியை செய்கிறேன் என்று சொல்லி கொண்டிருப்பது போதாது - நாம் வெளிச்சத்திலும், ஒளியிலும்
நடக்க வேண்டும். முழு நடத்தையும் நாம் பெற்ற கோட்பாட்டின் நிரந்தர கருத்தாகவும், அதன் பெலனும் உண்மையின்
நிலையான எடுத்துக்காட்டுமாகவும்
இருத்தல் அவசியமாக இருக்கிறது.
அன்பு
என்ற வார்த்தையில் எப்படி சகலமும் அடங்கிவிடுகிறதோ (ரோ. 13:9) நற்கிரியைகளின்
பட்டியலில் கலா 5:22-23ல் உள்ளவைகள் முழுமையாக அடங்கும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக