திங்கள், 25 நவம்பர், 2019

#624 *கேள்வி* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை என்றிருக்க - எலியா எப்படி சென்றார்?

#624  *கேள்வி - பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை என்றிருக்க - எலியா எப்படி சென்றார்?*

அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது, எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான் - 2 இராஜாக்கள் 2 : 11



பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை - யோவான் - 3 : 13

முரண்பாடு போல தோன்றும் இந்த வசனங்களை விளக்கவும்...

*பதில்*
எலியா மாத்திரம் அல்ல இந்த கேள்வியில் நாம் ஏனோக்கையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நம்முடைய சிந்தனைக்கு இது முரண்பாடு போல தோன்றினாலும் இயேசு கிறிஸ்து சொன்ன அந்த சூழ்நிலையை நாம் கவனிக்க வேண்டும் – அப்போது இந்த வசனங்களின் உண்மை தன்மை விளங்குகிறது:

கிறிஸ்துவைத் தவிர யாரும் பரலோகத்திற்கு சென்று பூமிக்கு வந்து தேவனை பற்றியும் பரலோக ராஜ்யத்தைப் பற்றியும் சொல்லவில்லை.

எந்தவொரு மனிதனையும் போலல்லாமல், இயேசு தனது பூர்வீக தங்குமிடம் பரலோகம் என்று அது பூமி அல்ல என்றும் குறிப்பிடுகிறார். அவர் இங்கே பூமியில் பிறப்பதற்கு முன்பே தான் பரலோகத்தில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

மோசே சொன்னதை இயேசு குறிப்பிடுகிறார், " நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;" (உபாகமம். 30:12).

பரலோகத்திலிருந்து வரும் கட்டளைகளைப் பின்பற்ற முடியும் என்று மோசே சொன்னார், ஏனெனில் அவற்றைப் பெற இயலாததை யாரும் செய்யத் தேவையில்லை.

இயேசுவும் இதேபோன்ற கருத்தை கூறுகிறார். அவர் தேவனிடமிருந்து கட்டளைகளை நேரடியாகக் கொண்டுவருகிறார். அவர் தனிப்பட்ட முறையில் செய்யக்கூடியவர், எந்த மனிதனை போலும் அல்ல.

நீதிமொழிகள் 30: 4-ல் இதே சொற்றொடர் காணப்படுகிறது, " வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?" இந்த கேள்விகளுக்கு பதில் ஒரு மனிதன் அல்ல கடவுளால் மட்டுமே இவற்றைச் செய்ய முடியும்.

தேவனுடைய குமாரனைப் பற்றிய குறிப்பைக் கவனியுங்கள். நீதிமொழிகள் 30: 4-ஐ ஒத்த சொற்றொடரைப் பயன்படுத்தி இதைக் குறிப்பிடுவதன் மூலம், நிக்கோதேமு தேவனுடைய குமாரனுடன் உரையாற்றுவதாக இயேசு தெரிவிக்கிறார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக