சனி, 23 நவம்பர், 2019

#623 *கேள்வி* சிலுவையை குறித்த சிந்தனையை பதிவிடவும்

#623 *கேள்வி* சிலுவையை குறித்த சிந்தனையை பதிவிடவும்

*பதில்*
சிலருக்கு, சிலுவையை கண்டால்:
- தொட்டு கும்பிட தோன்றும்.
- கழுத்தில் தொங்கவிட ஆசை கொள்வார்கள்.
- அதை வைத்து வழி பட விருப்பம் கொள்வார்கள்.
- அந்த படத்தை கட்டிடத்திற்குள் கூட வைக்கக்கூடாது என்று சில கிறிஸ்தவ அமைப்பில் அதை உதறுகிறார்கள்.
- அடையாளத்திற்கென்று சிலுவையை வைத்திருந்தாலும் அது விக்கிரகம் என்று சொல்பவர்களும் உண்டு.

வேதாகம கண்ணோட்டத்தில், 
சிலுவையை எப்படி நாம் புரிந்து கொள்வது?
 
கோணங்கள் வித்தியாசப்படுகிறது... 
பொறுமையாக கவனிக்கவும்.

*1) சிலுவையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது உங்களுக்கு என்ன முக்கியத்துவம் தருகிறது?*

பவுலைப் பொறுத்தவரை - அவர் உலகத்திலிருந்து பிரிந்ததைக் குறித்தது - கலாத்தியர் 6:14

அவருடைய பிரசங்கத்தின் மையமாக இருந்தது - 1கொரிந்தியர் 2: 2

இது பலருக்கு புரியாத ஒன்று 1கொரிந்தியர் 1:23

யூதாஸுக்கு அது பணத்தைப் பற்றியது - யோ. 12: 4-6, மத். 26: 15-16

பிலாத்துக்கு அது - தன்னைக் காப்பாற்றுவதற்கான ஒரு கருவி - யோ. 19:15-16

சேனை வீரருக்கு இது விளையாட்டு/ கேலி - மத். 27: 27-31; லூக். 23:11, யோ. 19: 23-24

இது ஒரு தீவிரமான முக்கிய விஷயம் என்பது அந்த நேரத்தில் அவர்கள்  மனதில் நுழையவில்லை - மத்தேயு 27: 50-54

*2) தேவனுடைய கண்ணோட்டங்கள்*
 
*அ) பிதாவிடம் அது நீதியை பூரணப்படுத்துவதாகும்.*
* இயேசுவின் இரத்தத்தால் நியாயப்படுத்தப்பட்டது - ரோமர் 5: 8-11

* இயேசு நமக்காக மரணத்தை ருசித்தார் - எபிரெயர் 2: 9

* அவர் நம்முடைய பாவங்களை சிலுவையில் கொண்டு சென்றார் - ஏசாயா 53: 5,11

* அவர் முன்மாதிரியாக இருந்தார் - அவர் நமக்கு எதிரான தேவனுடைய கோபத்தைத் திருப்பினார் 1யோ. 4: 9-10

*ஆ) குமாரனுக்கு (இயேசு) அது சமர்ப்பிப்பதைப் பற்றியது*
* அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் - எபிரெயர் 5: 7-9

* பிதாவின் சித்தத்திற்கு இயேசு சமர்ப்பித்தார் - மத்தேயு 26:39, 53-54

* அவர் சிலுவையைத் தாங்கினார் - எபிரெயர் 12: 2

* அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டார் - பிலிப்பியர் 2: 8-11

*3) கிறிஸ்தவரின் பார்வை*
ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அது இரட்சிப்பைப் பற்றியது

1. அவருடைய இரத்தத்தால் நமக்கு மீட்பைக் கொடுத்தார் - எபேசியர் 1: 7; 1பேதுரு 1: 18-19; வெளி. 1:5

2. அது நம்முடைய பாவங்களைக் கொன்றது - ரோமர் 6: 1-7

3. அது நம்மை தூய்மைப்படுத்தியது - வெளிப்படுத்துதல் 7:14

கிறிஸ்தவருக்கு அது ஒரு ராஜ்யத்தை வாங்கியது - அப்போஸ்தலர் 20:28

காப்பாற்றப்பட்டவர்களுக்கு அது தேவனுடைய வல்லமையை நிரூபித்தது 1கொரிந்தியர் 1: 18-24

அதை அங்கீகரிக்காதவருக்கு / இழந்தவர்களுக்கு, சிலுவையின் செய்தி முட்டாள்தனம் - Iகொரிந்தியர் 1:18

ஆனாலும், அந்த செய்தியை எப்படியும் நாம் பிரசங்கிக்கிறோம் - 1கொரிந்தியர் 1:23

இந்த உலக மனிதர்களுக்கு புரியாது - 1கொரிந்தியர் 2: 14-16

சிலுவையின் செய்தியில் தேவனுடைய வல்லமை இருக்கிறது - ரோமர் 1:16

நாம் கற்பிக்கும் எல்லாவற்றின் மையமும் இதுதான் - Iகொரிந்தியர் 2: 1-2

மற்ற ஜனங்கள் நம் கூடுகையை “அடையாளம் கண்டு கொள்ள” சிலுவையை பயன்படுத்துவது *அடையாள குறியாக மாத்திரம்* இருப்பதில் தவறு இல்லை. 

*ஆனால், அதை கண்டவுடன் ரோட்டில் போகின்றவர்கள் கையெடுத்து கும்பிட்டார்களென்றால் “சிலை வணக்கத்தை” ஊக்குவிக்க நாமே காரணமாகி விடக்கூடாது !!*

சிலுவையில் கிறிஸ்து தொங்கின பின்பு தான் புதிய ஏற்பாடு, புதிய சகாப்தம், யூதர் அல்லாத நாமும் தேவனை வணங்கவும் சுவிசேஷத்தின் மூலம் - நாமும் தேவனுடைய பிள்ளையாகும் பாக்கியம் பெற்றோம்.

அதனிமித்தம், சிலுவையை - அதாவது இரட்சிப்பைக் குறித்த செய்தியை சொல்லாமல் எந்த கிறிஸ்தவனும் இருக்க முடியாது !!

*சிலுவையை பார்க்கும் போது நமக்கு நினைவில் வரவேண்டிய சில:*
அவமானம்
 ஏளனம்,  
நிந்தை,  
மரணமே வந்தாலும் கூட இருப்போம் என்று சொன்னவரும் அதோகதியாக விட்டோடியது
 கொடுமை,  
அநியாயம்,  
சட்டவிரோதம்,  
ஊரே ஒன்று கூடி எதிர்ப்பது,  
அதிகாரிகளும் நியாயத்தை புரட்டிபோடுவது,  
பொய் சாட்சிகள்,  
நாம் வளர்த்தவரே நம்மை காட்டி கொடுத்தது,  
ஊரை விட்டே வெளியே தள்ளுவது போன்ற இப்படிபட்ட பாடுகளை அநுதினமும் சுமந்து கொண்டு இயேசுவை பின்பற்ற வேண்டும் (மத். 10:38)

இப்படியாக எதையுமே யோசிக்காமல் சிம்பிளாக ஒரு சிலுவையை தங்கத்தில் செய்து கழுத்தில் தொங்கவிடுவதோ, வருடத்திற்கு ஒருமுறை ஒலையிலும், வெள்ளியிலும் செய்து உலா வரவோ சொல்லவில்லை. 
அது தேவ கோபத்தை மூட்டி விடலாம்.. உபா. 4:23, 5:8, 1இரா. 14:9

சிலுவையை குறித்து இன்னும் ஏராளம் எழுத வேண்டி உள்ளது முக்கியமானவற்றை மாத்திரம் கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக