திங்கள், 25 நவம்பர், 2019

#625 - வெளி. 22:18-19 இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார் - இந்த வசனங்கள் வெளிபடுத்தல் புத்தகத்தை மாத்திரமா அல்லது வேதாகமம் முழுவதையும் குறிக்கிறதா?

#625 - *வெளி. 22:18-19ம் வசனங்களில் வரும் வாக்கியங்கள் இந்த வசனங்கள் வெளிபடுத்தல் புத்தகத்தை மாத்திரமா அல்லது வேதாகமம் முழுவதையும் குறிக்கிறதா? *

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது
: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளி. 22:18-19

மேலும் ஏன் இந்த கடிதங்கள் பரிசுத்த வேதாகமத்தில் சேர்க்கப்பட்டது?
கிறிஸ்தவனாக இருப்பதால் என்ன நன்மை?

நான் ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறேன் தமிழில் பதிலளிக்கவும்.

*பதில்*
நாம் வாசித்து கொண்டிருப்பது தேவனுடைய வார்த்தைகள்.

உதாரணத்திற்கு :
இந்தியாவின் சட்டப்படி வாகனம் ஓட்டுபவர்கள் சாலையில் இடது பக்கத்தில் ஓட்ட வேண்டும் என்றால் இடது பக்கம் தான் ஓட்ட வேண்டும் !!  மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை.

மேலும் இந்த வசனம் மற்ற புத்தகங்களின் கருத்துகளுக்கு எவ்வாறு ஒப்பிடுவது என்று உங்கள் கேள்வியாக இருப்பின் இதே கருத்துள்ள வசனங்கள் மற்ற அநேக இடங்களிலும் சொல்லப்பட்டிருப்பதால் *இந்த க்ஷரத்து* முழு வேதாகமத்திற்கும் பொருந்துகிறதாயிருக்கிறது.

வசனங்களை கவனிக்கவும்:
உபா. 4:2; 12:32; நீதி. 30:6; மத். 15:6-9; 15:13

உபா. 4:2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி. நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

உபா. 12:32 நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். 

யோசுவா 1:7 என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

உபா. 5:32 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.

யோசுவா 23:6 ஆகையால், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.

நீதி. 4:26 உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.

நீதி. 4:27 வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக. 

நீதி. 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

யோபு 13:7-10 நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ? அவருக்கு முகதாட்சிணியம்பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ? அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம் பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ? நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.

1கொரி. 4:6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனினிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.

இன்னும் அநேக வசனங்கள் உண்டு, மேலே குறிப்பிட்டவை போதுமென்று நம்புகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக