திங்கள், 11 நவம்பர், 2019

#606 - Can we drink wine? வைன் குடிக்கலாமா?

#606 - *Can we drink wine? Pls explain. What does he mean by word of wine. Grape juice or wine. நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசமும் கூட்டிக்கொள். 1 தீமோத்தேயு 5:23*

*பதில்*
Vine என்றால் ஆங்கிலத்தில் திராட்சை செடி என்று பொருள்.
Wine அல்ல Vine.

ஒயினோஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு Wine என்று ஆங்கிலத்திலும் புளிப்பில்லாத திராட்சை ரசம் அல்லது புளிக்கவைக்கப்பட்ட திராட்சை ரசம் அல்லது மது என்பது தமிழ் வார்த்தை.

மது அருந்துவதை விரும்பும் ஜனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள் !!

உண்மையில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால்:
ஆதி காலங்களில் – மருந்து மாத்திரைகளாக தயாரிக்கப்படவில்லை.

இலையை அரைத்தோ, தேவையான க்ஷாயங்களை தயாரித்தோ, எண்ணையை காய்ச்சியோ, வடியும் பிசினை மருந்தாகவோ உபயோகித்து மருத்துவம் செய்தார்கள். எரே. 30:13, எரே. 8:22, ஏசா. 1:6

திராட்சை ரசம் வயிற்று வலிக்கு நிவாரணி (1 தீமோ. 5:23)

முகத்தில் ஒலிவ எண்ணை தடவிக்கொள்வது பிரகாசத்தை கொடுக்கும் சங். 104:15

ஆனால் புளிக்கவைக்கப்பட்ட திராட்சை ரசம் எடுத்துக்கொள்வது துளியளவும் வேதத்திற்கு முரணானது. அதை சபையிலேயே அதுவும் கர்த்தருடைய பந்தி என்கிற பெயரில் உபயோகப்படுத்துவது எவ்வளவு பொிய அயேக்கியத்தனம் / துணிகரம் என்பது அவர்கள் முற்றிலும் 100-100 தவறான போதனையில் இருப்பவர்கள் என்று தெள்ளத்தெளிவாக நாம் புரிந்து கொள்வதற்கு கீழே உள்ள வசனமே சாட்சி :

லேவி. 10:9 நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.

நீதி. 31:4-6 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;

எசே. 44:21 ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.

எபே. 5:18-21 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;  சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, *தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்*.

தீத்து 1:7-9 ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.

தீத்து 2:3-5 முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.

1தீமோ. 3:3-4 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். 
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக