திங்கள், 11 நவம்பர், 2019

#607 *கேள்வி* தேவ தூதர் என்பவர் இயேசுவா அல்லது அதை தூதர் என்றே புரிந்துக் கொள்ள வேண்டுமா? ஏனெனில் அநேக இடங்களில் தூதன் என்றும் தூதர் என்றும் எழுதப்பட்டிருக்கிறது

#607
*கேள்வி*
ஐயா கேள்வி 254ன் பதிலில் தேவ தூதர் என்பவர் இயேசுவா அல்லது அதை தூதர் என்றே புரிந்துக் கொள்ள வேண்டுமா?

ஏனெனில் அநேக இடங்களில் தூதன் என்றும் தூதர் என்றும் எழுதப்பட்டிருக்கிறது

*பதில்*
தூதர் என்றே வேதம் சொல்கிறது. அப்படியே புரிந்து கொள்வது நமக்கு நல்லது.

அந்த தூதன் இயேசு என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் நான் காணவில்லை.

ஓசியா 12:4 அவன் *தூதனானவரோடே* போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.


மேலும் 31 இடங்களில் தூதனானவர் என்றும், 2 இடங்களில் தூதனானவன் என்றும் தமிழ் வேதத்தில் காணமுடியும் (அப் 27:23, வெளி 17:7)

ஆனால் ஆங்கில மற்றும் மூல பாஷை வேதாகமத்தில்
தூதனானவர் என்கிற வார்த்தை 213 முறையும், தூதனானவன் என்கிற வார்த்தை 153 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

*தூதனானவர்* - என்பதற்கு மூலபாஷையில் (மாலாக்) குறிப்பாக தேவதூதர், ஒரு தீர்க்கதரிசி, தேவ ஊழியர் அல்லது வேத ஆசிரியர், தேவதை ராஜா தூதர்,
தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டவர், இராஜாவின் செய்தியாளரை குறிக்கிறது.

*தூதனானவன்* -  என்பதற்கு மூலபாஷையில் (ஆஞ்சிலோஸ்) குறிப்பாக நல்ல செய்தி கொண்டு வருபவர்,  ஒரு தூதர்; குறிப்பாக ஒரு தேவதை; ஒரு வேத போதகரைக் குறிப்பது, தகவல் சொல்பவர் என்ற பதத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்யவும்.

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக