திங்கள், 4 நவம்பர், 2019

#600 - ஐயா தகுதியான வஸ்திரங்கள் என்றால் என்ன? சபையின் போதகர் டி சர்ட் அணிந்து கொண்டு மேடையில் நின்று கொண்டு செய்தி கொடுக்கலாமா?

#600 - *ஐயா தகுதியான வஸ்திரங்கள் என்றால் என்ன? சபையின் போதகர் டி சர்ட் அணிந்து கொண்டு மேடையில் நின்று கொண்டு செய்தி கொடுக்கலாமா?*

*பதில்*
தகுதியான வஸ்திரம் என்பதை நிர்ணயிப்பது சமுதாயம் என்றே நான் கருதுகிறேன்.

வஸ்திரம் என்பது சரீரத்தில் மறைக்க வேண்டிய இடத்தை மறைப்பதற்கு அவசியமான ஒன்று.

இன்னும் ஆழமாக கவனிக்க வேண்டும் என்றால் முதலாவது ஆடைகளின் நோக்கம் என்ன என்பதை கவனிக்கவும்?

மனிதன் ஆதியிலே ஆடை அணியவில்லை - ஆதி. 2:25

ஆடை இல்லாதது மனிதனின் அப்பாவித்தனத்தைக் காட்டியது.

சிறு குழந்தை எப்படி தனது தோற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் நிர்வாணமாக முடிந்து ஓட முடிகிறதோ அது போல ஆரம்ப கட்டத்தில் மனிதனும் இருந்தான்.

இருப்பினும், பாவம் என்ற தேவ வார்த்தைக்கு மீறின பின் விஷயங்கள் மாறின.

மனிதனின் கண்கள் நன்மை தீமைக்கு திறந்தது. அந்த அறிவால் அப்பாவித்தனத்தை இழந்தான் - ஆதி. 3:7

நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளினால் பலிபீடத்தில் ஏற வேண்டாம் என்ற கட்டளை உள்ளது நியாயபிரமணத்தில் - யாத். 20:26

கூடுதல் முன்னெச்சரிக்கையாக, ஆசாரியர்கள் தங்கள் நிர்வாணத்தை மறைக்க, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்க வேண்டும்; என்ற கட்டளையை நாம் கவனிக்க வேண்டும் - யாத். 28: 42-43

நம் தமிழ் கலாசாரத்தில் வேஷ்டி கட்டி சட்டை போடுவதை முறையான அங்கீகரிக்கப்பட்ட உடையாக ஒரு காலத்தில் இருந்தது.

பள்ளி கூடங்களில் கருப்பு அல்லது காக்கி நிற Pant + வெள்ளை நிற Shirt போடுவதை அங்கீகரித்தார்கள். 
 
கல்லூரிகளில் எந்த கலரும் உபயோகிக்கலாம்  ஆனால் ஜீன்ஸ் அணிவதையும் டீ-ஷர்ட் போடுவதும் இன்றைய காலகட்டம் வரை தமிழ்நாட்டில் கல்லூரிகளில் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்படவில்லை. 
 
வீட்டில் இருப்பது போன்ற அல்லது காஷ்யூவல் என்று சொல்லப்படும் சாதாரண நேரங்களில் அணியக்கூடிய உடையாக அதை அடையாளம் கண்டு இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பது நடைமுறை புரிதல்.

சபையார் எப்போதும் பிரசங்கத்தில் கவனம் செலுத்த வைக்க வேண்டுமேயன்றி பிரசங்கியாளராகிய தன்னை கவனிக்க / ஈர்க்கும் வகையில் உடை அணிவது முற்றிலும் தவறு.

இப்போதைய காலத்தில் தமிழ் நாட்டில் டீ-ஷர்ட் அணிவதை சமுதாயம் இன்னும் வித்தியாசமாக பார்த்து அதை ஊழியருக்கான உடை என்று பொதுவாக அங்கீகரிக்காத பட்சத்தில் மேடையேறி தன்னை அலங்கரிப்பது தவறானது தான்.

கவர்ச்சியாகவோ அலங்காரமாகவோ வந்து மேடையில் நில்லாமல்,   வெளிநாடுகளில் டீ-ஷர்ட் போட்டாலும், கோட் போட்டாலும், சாதாரண சட்டை போட்டாலும் யாரும்  உடையை கவனிப்பது இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு நிர்வாணம் வெளியே தொியாத அளவில் உடை இருக்கும் வரை பெரிய மனசலனம் எதுவும் ஏற்படுவதில்லை.

1999ல் நான் ஒரு பிரசங்கம் முடித்து கீழே இறங்கியவுடன், எனது இடது கையிலுள்ள ஒரு தங்க சங்கிலியை குறித்து விசாரித்தார் !! (அவர் பெயர் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது). நான் கொடுத்த தேவ செய்தியை குறித்து விசாரிக்காமல் அல்லது கவனிக்காமல், என் கையில் இருந்த சங்கிலி அவர் பார்வையில் பிரதானமாகப்பட்டதால், அன்றோடு நான் போட்டிருந்த அந்த சிறிய தங்க சங்கிலியை கழற்றி விட்டேன்.

தகுந்த வஸ்திரம் என்பது நிர்வாணத்தை மூடுவது மாத்திரமல்லாமல் தன்பால் மற்றவரின் கவனத்தை ஈர்க்காத வகையில் இருத்தல் அவசியம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக