திங்கள், 4 நவம்பர், 2019

#599 - வாரத்தின் முதல் நாள் ஞாயிறு தானா?

#599 - *வாரத்தின் முதல் நாள் ஞாயிறு தானா?*

*பதில்*
அசைவாட்டும் பண்டிகை (லேவி. 23:15), அறுப்பின் பண்டிகை (யாத். 23:16), வாரங்களின் பண்டிகை(யாத். 34:22, உபா. 16:10), முதற்கனி பண்டிகை (எண். 28:26), அல்லது 50வது நாள் பண்டிகை என்று சொல்லப்படும்  பெந்தெகோஸ்தே பண்டிகையானது (அப். 2:1) வாரத்தின் முதல் நாளில் வருகிறது.

அதாவது 7வாரங்கள் பண்டிகை முடிந்த மறுநாள். 7x7=49+1 = 50

  லேவி. 23:15-16 நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,  ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.

சபத் என்று சொல்லப்படும்  நாள் 7ம் நாள்.

செபா என்றால் ஏழு.

சனிக்கிழமை என்ற தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Saturday என்றும் அரபு மொழியில் யோம் அல் சபா என்றும் எபிரேய பாஷையில் சாபாத் שַׁבָּת என்றும் சொல்லப்படுகிறது.

சனிக்கிழமைக்கு அடுத்த நாள் என்பது ரோமானியரின் நாள்காட்டியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட கிரிகோரியன் நாள்காட்டி முறையில் ஞாயிறுக்கிழமையை வேதத்தின் படி வாரத்தின் முதல் நாள் என்று அறியமுடிகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக