#601 - *இயேசுவை அடக்கம் செய்த யோசேப்பு என்பவர் யார்?* இவர் இயேசுவின் வளர்ப்பு தந்தையா? இல்லையென்றால் அவர் ஏன் அடக்கம் செய்ய வேண்டும்?
*பதில்*
இயேசுவின்
வளர்ப்பு தந்தையான யோசேப்பு என்பவரை நாம் கடைசியாக எருசலேம் தேவாலயத்தில் காணமுடிகிறது.
லூக்கா 2:43
இந்த
இடம் தான் இயேசுவின் தாயாகிய மரியாளின் கணவரான யோசேப்பை குறித்த கடைசி தகவல்
வேதத்தில் நாம் காணமுடியும்.
அதன்
பின்னர் யோசேப்பிற்கு என்ன ஆனது என்று வேதத்தில் சொல்லப்படவில்லை.
என்னுடைய அனுமானம்
என்னவென்றால் - சிலுவையில் இயேசு கிறிஸ்து தொங்கிக்கொண்டிருக்கும்போது, “இயேசு தம்முடைய தாயையும்
அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி:
ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன்
தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்” தன்னிடமாய் என்றால் – *தன்
வீட்டிற்கு அழைத்து சென்றார்* என்று மூலபாஷையில் சொல்லப்படுகிறது. இதை யோவான்
19: 26-27-ல் வாசிக்கிறோம்,
”அவருடைய
பூமிக்குரிய தாயைக் கவனித்துக்கொள்வதற்காக,
கர்த்தர் மரியாளை யோவானின் வீட்டிற்கு அனுப்பினார். கர்த்தராகிய
இயேசு கடந்து போய் விட்டபின், மூத்த மகனானின் ஸ்தானத்தில்
இருக்கும் அவர், தன்னுடைய
தாயைக் கவனித்துக்கொள்வதை உறுதிசெய்யும் பொறுப்பை யோவானிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார்.
அந்த
நேரத்தில் மற்ற சொந்த சகோதரர்கள் அவிசுவாசிகளாக இருந்ததால் அவர் வேறு யாருடனும் தன்
தாயாரை அனுப்பவில்லை. யோ. 7: 5
*இயேசு
ஏன் மரியாளை யோசேப்பின் வீட்டிற்கு திருப்பி அனுப்பவில்லை?* யோசேப்பு ஒரு
வேளை உயிரோடு இல்லாமல் இருந்திருக்கலாம். எந்த சூழ்நிலையிலும் மனைவியை தள்ளிவிடும்
ஆள் அவர் அல்ல என்பதை ஏற்கனவே வேதம் நமக்கு தெளிவு படுத்தியிருக்கிறது. மத். 1: 19
*இயேசுவை அடக்கம் செய்த யோசேப்பு என்பவர் யார்*?
இந்த
யோசேப்பு என்பவர் –
அரிமத்தியா ஊரை சார்ந்தவர்.
யூதர்களில்
மதிப்பு மிக்க ஆலோசனைக்காரராக (சனகரிப் சங்க உறுப்பினர்) இருந்தவர்.
இயேசுவின்
போதனைகளை விசுவாசித்தவர்.
ஐசுவரியவானாக
இருந்தவர் (பணக்காரன்).
மறைமுகமாக
– இவர் இயேசுவின்
சீஷர்களில் ஒருவர்.
யோ.
19:38, லூக்கா
23:51 வசனங்களில் இந்த ஆதாரங்களை காணலாம்.
**
நம் நாட்டில் நடப்பது போல மண்ணை தோண்டி புதைப்பது அல்ல இஸ்ரேல் நாட்டில்.
அவர்கள்
தங்கள் தங்கள் குடும்பத்திற்கென்று மரித்தபின் அடக்கம் செய்வதற்காக மலை பகுதிகளில்
ஒரு சிறு பகுதியை குகையை போல குடைந்து அதன் வாசலை கல்லால் அடைத்து விடுவது மரபு.
ஒருவர்
இறந்த உடன் இப்படி மலையை குடைந்து அதில் வைக்க சமயம் கிடைக்காது என்பதால் முன்னதாகவே
தங்கள் வசதிக்கேற்ப பொிய அல்லது சிறிய குகையை செய்து வைத்து விடுவார்கள்.
ஐசுவரியவானாக
இருந்ததால் இந்த யோசேப்பு தன் குடும்பத்திற்காகவோ அல்லது தனக்காகவோ வெட்டி தாயார்
நிலையில் இருந்த இது வரை யாரையும் வைக்கப்படாத புதிய கல்லறையில் இயேசுவை வைக்க
தானாக முன்வந்தார் –
லூக்கா
23:53.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக