திங்கள், 4 நவம்பர், 2019

#598 - இறந்தவர்களின் ஆவி ஆத்மா எங்கே போகும்? இறந்தவர்களின் ஆவி ஆத்துமா பூமியில் இருக்க முடியுமா? கொலை, தற்கொலை, விபத்து போன்றவற்றில் இறந்தவர்களின் ஆவி ஆத்துமா எங்கே இருக்கும்? இறந்தவரின் ஆவி அடுத்த மணிதற்குள் புக முடியுமா?

#598 - *இறந்தவர்களின் ஆவி ஆத்துமா எங்கே போகும்?  இறந்தவர்களின் ஆவி ஆத்துமா பூமியில் இருக்க முடியுமா?  கொலை, தற்கொலை, விபத்து போன்றவற்றில் இறந்தவர்களின் ஆவி ஆத்துமா எங்கே இருக்கும்இறந்தவரின் ஆவி அடுத்த மனிதற்குள் புக முடியுமா?*

*பதில்*
1) *இறந்தவர்களின் ஆவி ஆத்மா எங்க போகும்* ?
ஆவி என்பது – காற்று
* மனிதனுக்குள் ஆவியை தேவன் உண்டாக்குகிறார் (சகரியா 12:1)
* தேவன் ஆவியாயிருக்கிறார் – யோ. 4:24
* மனிதன் மரித்தவுடன் ஆவி – தேவனிடத்தில் திரும்பி விடுகிறது (பிர. 12:7)

நாம் தேவனுடைய ரூபத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம் – மனிதன் இறந்ததும் – ஒருவர் இறந்தவுடன் அவரின் ஆவி – தான் ஆரம்பத்தில் எங்கிருந்து வந்ததோ அதே இடத்திற்கு (தேவனிடத்திற்கு) திரும்பிவிடும் – பிர. 12:7

2)*இறந்தவர்கள் அவர்களின் ஆவி ஆத்மா பூமியில் இருக்க முடியுமா*?
இல்லை. இறந்தபின் தன் ஆவியினிடத்திற்கு ஆத்துமாவினிடத்திற்கும் மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.  அவன் ஆவியும் ஆத்துமாவும் தன் தன் இடத்திற்கு பிரிந்து போய் விடுகிறது. மத். 10:28, யோ. 10:18

3)*கொலை ,தற்கொலை ,விபத்து போன்றவற்றில் இறந்தவர்களின் ஆவி ஆதுமா எங்கே இருக்கும்*?
ஆவி தேவனிடத்திற்கு திரும்பிவிடும் பிர. 12:7

கொலையும் தற்கொலையும் ஒன்று.
கொலை வேறொருவர் செய்கிறார்.
தற்கொலை தானே தன் ஆவிக்கு செய்து கொள்கிறார்.

நியா. 16:29-30; Iசாமு. 31:4; Iசாமு. 31:5; IIசாமு. 17:23; Iஇரா. 16:18; மற்றும் மத். 27:5, மற்றவர் உதவியோடு செய்யப்பட்ட - நியா. 9:53-54 இப்படி ஏழு இடங்களில் வேதத்தில் தற்கொலையை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

எங்கிலும் தற்கொலையானது தவறா சரியா என்று குறிப்பாக நாம் அறியமுடியவில்லை.

எனினும்.. மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 1யோ. 3:15

உங்கள் ஆத்துமாவிற்கு தீங்கு ஒன்றும் செய்து கொள்ள கூடாது அப். 16:28

.... மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.  அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு. 1யோ. 5:16-17

தற்கொலை என்பது பாவம் என்று சொல்வதற்கு அநேக காரணங்கள் உண்டு என்று சொல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

தேவன் நியமித்த காலகட்டம் வரைக்கும் வாழாமல் தன் தீர்மானத்தை எடுக்கும் போது அது கேள்விக்குறியானதே. நியாயந்தீர்க்க தேவனுக்கே உரிமை உள்ளது.

4)*இறந்தவரின் ஆவி அடுத்த மணிதற்குள் புக முடியுமா*?
நிச்சயமாக இல்லை.

தேவனே அதற்கு அதிகாரி. மனுஷன் தன் இஷ்டப்படி தீர்மானம் செய்ய முடியாது.

ஆவி என்பது காற்று, அல்லது அவனவனுடைய உயிர்.

தன்னுடைய சரீரத்திலிருந்து பிரிந்ததும் அது தேவனிடத்திற்கு திரும்பிவிடும்.

உலகத்தில் சுற்றி திரிந்த ஆவிகள் சாத்தனும் அவனை சார்ந்த தூதர்களும் வெளி. 12:9

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*வலைதளம் :*
http://www.kaniyakulamcoc.wordpress.com

*YouTube “வேதம் அறிவோம்” :*
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக