#524 - *வெளிப்படுத்தின விசேஷம் 3:17 இந்த வசனங்களில் செழிப்பு என்பது ஆண்டவர் வாந்தி பண்ணுவதாகதானே உள்ளது?*
நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால் - வெளிப்படுத்தின விசேஷம் 3:17
நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால் - வெளிப்படுத்தின விசேஷம் 3:17
இந்த வசனங்களில் செழிப்பு
என்பது ஆண்டவர் வாந்தி பண்ணுவதாகதானே உள்ளது?
*பதில்*
எவ்வளவு
செழிப்பாக இருந்தாலும் அவர்கள் முற்றிலும் ஆன்மீக வறுமையில் இருக்கிறார்கள் என்பதை
சுட்டிக்காட்டுகிறார்.
அவர்களுடைய பொருள்சார் செல்வத்தை விட அதிக மதிப்புள்ள பொன்னை தேவனிடம்
வாங்கும்படி அவர்களுடைய சொந்த பேச்சுவழக்கில் தொியப்படுத்தப்படுகிறது.
அவர்களுடைய ஆன்மீக குருட்டுத்தன்மையை சரிசெய்ய, நீதியை
காணும்படியான கண்கள்
திறக்கப்படவேண்டும். அவர்களின் சுய ஏமாற்றத்திலிருந்து எச்சரிச்கை விடப்படுகிறது. சங் 19: 8: “கர்த்தருடைய
நியாயங்கள் செம்மையும்,
இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது; கர்த்தருடைய
கற்பனை தூய்மையும், கண்களைத்
தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது”
1பேது
5: 5-ல் மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்
என்றார். வெளி 7: 14ல் “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய
இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.. ”என்கிறது நீதிமான்களின் உடுத்தியவைகள்.
செழிப்பாக
வாழ்வது பாவமல்ல –
அதன் மீது நாட்டமாக இருப்பதே பாவம்.
1தீமோ 6:17-19 இவ்வுலகத்திலே
ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற
ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும்,
நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க்
கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும்,
நன்மைசெய்யவும்,
நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும்,
தாராளமாய்க் கொடுக்கிறவர்களும்,
உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல
ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு என்றார் பவுல்.
ஐசுவரியத்தை
தருகிறவர் தேவன். ஆகவே மனிதன் பெற்ற ஐசுவரியத்தை விட கொடுத்தவரிடம் அன்பு வைக்கவேண்டும்.
பிர
5:19-20 தேவன்
ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே
புசிக்கவும், தன்
பங்கைப் பெறவும், தன்
பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய
அநுக்கிரகம். அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம்
பண்ணுகிறபடியினால், அவன்
தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.
உண்மையான செல்வங்களைத் தேடுவதற்கு சபையாருக்கு தேவன் ஆலோசனை
வழங்கிய வலுவான ஒப்புமைகள் இவை.
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக