#574 - *அப். பவுலை குறித்து சமீபகாலமாக குற்றப்படுத்தி வருகிறார்கள் மாற்று
மதத்தினர்?* அப். பவுல் தான் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்றும் அவர் இயேசு
கிறிஸ்து போதிக்காத புதிய போதனைகளை போதித்தார் என்றும், இயேசுவை
இவர் பார்த்ததே கிடையாது என்றும் அதிகமாக புதிய ஏற்பாட்டில் சபைக்கு எழுதிய
கடிதங்கள் இவர் எழுதியது இதுவே வேதாகமத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.... இவர் எழுதிய கடிதங்கள் எப்படி ஒரு இறைவேதமாகும் என்று குற்றம் சுமத்துகின்றனர்? இதற்கான பதிலை தரவும் ஐயா
*பதில்*
பார்வையற்றோர்
யானையை தடவி பார்த்து அவரவர் தடவிபார்த்ததை வைத்து மற்றவரிடம் யானை இவ்வாறு தான் இருந்தது
என்று வாதாடினார்களாம். இப்படி ஒரு வழக்க
சொல் நம் தமிழ் ஜனங்களிடையே உண்டு.
வேதத்தை
வெறுமனே படிப்பவர்கள் இப்படி ஏதாவது ஒன்றை அவர்களாகவே புரிந்து கொண்டு மேடையேறிவிடுவது
வேற்று மதத்தினர் மாத்திரம் அல்ல இயேசுவின் பெயரை சொல்லிக்கொண்டே பல உண்மையை புரியாமல்
வைராக்கிய கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள் ஏராளம்.
வேதத்தை
படிப்பது முக்கியமல்ல – புரிந்து கொள்ளும்படி படிக்க வேண்டியது அவசியம்.
கிறிஸ்துவின்
சீஷர்களை பார்த்து அந்தியோகியா என்ற ஊர் ஜனங்கள் அவர்களை முதல் முதல் கிறிஸ்தவர்கள்
என்று பெரிட்டு அழைத்தார்கள் (அப். 11:26)
இயேசு
தன் கட்சியையோ தன் பிரிவையோ உருவாக்கி அதில் தன் சீஷர்களை அங்கத்தினர்களாக்கவில்லை.
மேலும் என்னை பின்பற்றுகிறவர்கள் அனைவரும் கிறிஸ்தவ கட்சிக்காரர்கள் என்று அவர்
ஒரு பெயரை சூட்டவும் இல்லை.
அவர்
போதனையை கேட்டு அவர் வார்த்தைக்கு கீழ்படிந்தவர்களை தன் சரீரத்தில் ஒரு அங்கமாக
பாவித்தார் (அப். 2:47) எக்ளீசியா என்ற கிரேக்க வார்த்தைக்கு தமிழில் பிரித்தெடுக்கப்பட்டவர்கள்
என்று பொருள். அதாவது பாவ வாழ்க்கையிலிருந்து பரிசுத்தத்திற்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.
அதை சபை என்று அழைத்தார்கள்.
அந்த
சரீரமாகிய சபையில் (எபே. 4:12) கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கீழ்படிந்தவர்களை மனிதர்கள்
அல்ல கர்த்தரே இணைத்தார் என்று வேதம் சொல்கிறது. (அப். 2:47)
அப்.பவுல்
இயேசுவை நேரடியாக பார்த்தவர் –
1கொரி. 15:8, அப். 9:10
அப்.பவுலை
எழுதிய நிரூபங்கள் வேதத்தில் உள்ளவை மொத்தம் 13 (பதிமூன்று).
அவையாவும்
பரிசுத்த ஆவியானவரின் உதவியால் எழுதப்பட்டவை என்று அவரே தன் நிரூபத்தில் எழுதியிருக்கிறார்
– 2தீமோ.
3:16
வேதாகமத்தில்
மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளது. ஏறத்தாழ 40 பேர் எழுதியது.
சுமார்
1500 ஆண்டுகள் இடைவெளியல் ஒவ்வொரு புத்தகமும் எழுதப்பட்டவை.
வேதாகம புத்தகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அனைவராலும்
தொடர்ந்து எழுதப்படவில்லை.
உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமான
மல்கியாவுக்கும், புதிய ஏற்பாட்டின் தொடக்கத்திற்கும் மத்தேயு
நற்செய்தியுடன் 400 ஆண்டுகள் கடந்துவிட்டன.
புதிய ஏற்பாடு கி.பி 44 முதல் 90 அல்லது 95 வரை சுமார் 50
ஆண்டுகளில் எழுதப்பட்டது.
ஒவ்வொரு எழுத்தாளரும் தனது குறிப்பிட்ட புத்தகத்தை எழுத
எவ்வளவு நேரம் ஆனது என்பதை அறிய முடியாது.
மோசே பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை சுமார் 40
ஆண்டுகளில் (கிமு 1445—1405) எழுதினார் என்று வேத வல்லுனர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
எழுத்தாளர்களில் அரசர்கள் உண்டு, மீனவர்கள் உண்டு, போர்சேவகர் உண்டு, அரசாங்க அதிகாரிகள் உண்டு, இளவரசர்கள் உண்டு இப்படி
பலதரப்பட்டவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்திராமலும் அறியாமலும் வேதத்தில்
இருக்கும் எழுதப்பட்ட புத்தகங்கள் அதிகம்.
எழுதப்பட்ட தகவல்களில் எந்த முரண்பாடும் ஒன்றோடொன்று இல்லாததால்
– அவை அனைத்தையும் 2தீமோ. 3:16ல் சொன்னது போல *தேவ ஆவியானவரே
எழுதினார்*
என்பதை யாராலும்
மறுக்க முடியாது.
ஒரு
மனிதன் கற்பனையாக / காவியமாக / புராணமாக தனக்கு தோன்றியதை எழுதிய புத்தகமல்ல இது – பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட
யாவும் சரித்திரம் நிறைந்தது. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எங்கு நடந்தன என்று
குறிப்போடு உள்ள ஒரு பரிசுத்த வேதாகமம். !!
ஆகவே
இது மனிதன் எழுதிய புத்தகம் அல்ல.
மேலும்
அதை வெறும் வேதாகமம் என்று சொல்லப்படாமல் *பரிசுத்த வேதாகமம்* என்று இதை அழைக்கிறோம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக