*பதில்*
பாஷை
என்கிற வடசொல்லின் தமிழ் வார்த்தை மொழி.
அந்த
அரங்கத்தில் கூடியிருப்பவர் புரிந்து கொள்ளக் கூடிய வகையில், அவர்கள் மொழியில் பேசாமல்
அவர்கள் அறியாத மொழியில் பேசினால் அங்கு கூடியிருப்பவருக்கு அது *அந்நிய மொழி*.
அப்படி
பேசுகிறவர்களின் வார்த்தையை அங்குள்ளவர்கள் புரிந்து கொள்ளாமல் இருந்தாலும் சகல மொழியையும் உருவாக்கின தேவனுக்கோ, இவர்கள் பேசுவதற்கு முன்னரே இவர்களது எண்ணங்களை அறிந்திருக்கிறவராகையால் *அந்நிய மொழியில் பேசுகிறவர் தேவனிடத்தில்
பேசுகிறார்*
இந்த
வசனத்தில் வரும் *இரகசியம் என்பது தேவ இராஜ்ஜியத்தின் வரவு / சபையை
குறித்த செய்தியாகும்*. விளக்கம் கீழே :
உலகத்தோற்றத்திற்குமுன்னே
தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும்,
*மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே*
பேசுகிறோம். 1கொரி. 2:7
அன்றியும், *தேவபக்திக்குரிய
இரகசியமானது* யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன்
மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று
விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே
விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே
ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். 1தீமோ. 3:16
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு *ஒரு இரகசியத்தை
நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில்,
புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு
பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்*. ரோ. 11:25
*எது
இரகசியம்* ?
ஆதிகாலமுதல்
அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி
வெளியரங்கமாக்கப்பட்டதும், *சகல ஜாதிகளும்
விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற
இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான* இயேசுகிறிஸ்துவைப்பற்றிய
பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே..…
ரோ. 16:25-26
எபே.
1:9 காலங்கள்
நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும்
பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று,
(எபே. 1:10) தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள *சித்தத்தின் இரகசியத்தை* எங்களுக்கு
அறிவித்தார்.
தேவன்
நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி
தீர்மானத்தின்படியே, உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த
ஞானமானது *சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்
பொருட்டாக, இயேசுகிறிஸ்துவைக்கொண்டு
எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த
இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று*, எல்லாருக்கும்
வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு
அளிக்கப்பட்டிருக்கிறது. எபே. 3:9-11
தேவன்
மாம்சத்தில் வெளிப்பட்டு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பாவமன்னிப்பை உண்டாக்கி
சபையின் மூலமாக புறஜாதியாருக்கும் / புறஇனத்தாருக்கும் இரட்சிப்பை ஏற்படுத்தினார்.
*இரகசியம் என்பது – சபையின் இரட்சிப்பின் செய்தியை
குறிக்கிறது*.
சபையில்
இரட்சிப்பின் செய்தியை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பேச வேண்டும்.
*பின் குறிப்பு* :
வேற்று மொழி பேசுகிறவர் ஒருவர் கூடி வந்த சபையாருக்கு தனது மொழியில் தேவ செய்தியை கொடுக்கும் பட்சத்தில்;
அந்த செய்தியாளர் அவரது வேற்று மொழியில்
பேச,
வேறொவர் அங்கு
கூடியிருக்கும் அனைவருக்கும் புரியும்படி அந்த செய்தியை மொழிபெயர்க்கவேண்டியது கட்டாயம்.
*அந்நிய மொழியில் பேசுகிறவரேயல்ல - வேறொருவரே மொழிபெயர்க்கவேண்டும்*.
அப்படி மொழி
பெயர்க்கப்படாத பட்சத்தில் எந்த அந்நிய மொழியிலும் சபையில் பேசாமல், அவரது வீட்டில் அவர் விருப்பப்படி பேசிக்கொள்ளலாம் என்று பரிசுத்த ஆவியானவர்
பவுல் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார். - 1கொரி. 14:28
அது மாத்திரமல்ல அந்நிய மொழியில் சபை கூடும்போது அதிகபட்சம் 3 பேர் மாத்திரமே பேச அனுமதியுண்டு !!
மேலும், சபையில் அந்நிய மொழியில் பேசுபவர்கள் மொத்தமாக கூட்டமாக ஒன்றாய் சேர்ந்து அனைவரும் பேசக் கூடாதாம் !!
ஒருவர் மாறி ஒருவர் தான் பேச வேண்டுமாம். 1கொரி. 14:27
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
ஒருவர் மாறி ஒருவர் தான் பேச வேண்டுமாம். 1கொரி. 14:27
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக