புதன், 9 அக்டோபர், 2019

#548 - அப்போஸ்தலர்கள், மற்றும் பிற சகோதரர்களை ஒருமையில் அழைக்கலாமா?

#548 - *அப்போஸ்தலர்கள், மற்றும் பிற சகோதரர்களை ஒருமையில் அழைக்கலாமா?*

*பதில்*
தமிழ் வேதாகமம் மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

பேச்சு வழக்க ஆங்கிலத்தில் பொியவர்களுக்கென்றோ சிறியவருக்கென்றோ மரியாதையான வார்த்தை வித்தியாசம் இருப்பதில்லை. அந்த வசதி தமிழ் மொழியில் அதிகம் இருக்கிறது.

வா என்பதும் வாருங்கள் என்பதும் மரியாதையை வித்தியாசப்படுத்தி காண்பிப்பது தமிழ் மொழியின் சிறப்பு.

இலக்கிய ரீதியாக அனைவரையும் அவன் இவன் என்றே சொல்வது இலக்கிய மரபு.

வேதாகமத்தில் தேவனை தவிர போதுமான இடங்களில் கூடுதலாக அனைவரையுமே ன் உபயோகப்படுத்தியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஒன்றிரண்டு இடங்களில் இயேசுவுக்கு எதிராக பேசப்பட்டபோது எதிராளிகள் கூற்றை புரிந்து கொள்ளும் வண்ணம் கிறிஸ்துவை அவன் என்ற ஒருமையில் வருவதை நாம் கவனிக்கலாம் மத்  9:34

வழக்கமாக அநேக வீடுகளில் பிள்ளைகள் தன் அம்மாவை நீ வா போ என்று ஒருமையிலும் அப்பாவை நீங்க வாங்க போங்க என்று சொல்வதையும் கவனிக்க முடியும்.

அப்பா தன்னுடைய மனைவியை நீ-வா-போ என்று கூப்பிடுவதை பிள்ளை கேட்டு தானும் அம்மாவை நீ-வா-போ என்றே பழகிவிடுகிறது.

அம்மாவோ தன் கணவரை வாங்க-போங்க என்று கூப்பிடுவதை பிள்ளை கேட்டு தானும் அப்பாவை வாங்க-போங்க என்று பழகுகிறது !!

அதுபோல சபையில் ஊழியர்கள் பேசும் போது ஜனங்களின் தன்மையை அறிந்து அவர்களுக்கு மத்தியில் பேசுவது நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்.

அப்போஸ்தலரையும் மற்ற ஜனங்களையும் மரியாதையோடு அழைத்து பழகுவது நல்ல பண்பு.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக