புதன், 9 அக்டோபர், 2019

#546 - இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். யோவான் 2:19 - விளக்கவும்.

#546 - *இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். யோவான் 2:19 - விளக்கவும்*.

*பதில்*
ஆலயம் என்பது தமது சரீரத்தை குறித்து சொன்னார் - யோ. 2: 21

புதிய ஏற்பாட்டில் ஆலயம் என்பது ஒரு கட்டிடத்தை அல்ல சரீரத்தை அழைக்கிறது என்பதை நாம் அறிகிறோம் 2கொரி. 5: 1,  1கொரி. 3: 16-17; 1கொரி. 6: 19; 2கொரி. 6: 16.

தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் அவருக்குள் வாசமாயிருப்பதை இந்த ஆலயத்தை இடித்தால் என்று எருசலேம் தேவாலய கட்டிடத்தை குறிப்பிடுவது அவரையே குறிப்பிட்டதற்கானது என்பதின் மூலம் அவருடைய வல்லமையை நமக்கு இன்னும் வலியுறுத்துகிறது. கொலோ. 2: 9, சங். 76: 2.

மூன்று நாட்களில் நான் அதை எழுப்புவேன் என்று தான் உயிரோடு எழும்பப்போவதை யூதர்களுக்கு சொன்னார். அவர்களோ  அவருடைய கருத்தை உள்வாங்க அறியாத குருடராய் கட்டிடத்தையே அர்த்தமாக கொண்டார்கள்.

அவ்வாறே இன்றைய கால கிறிஸ்தவமும் மதமாகி போனதற்கு முக்கிய காரணம்.

வேதத்தை பகுத்து படிக்க அறியாமல் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அவரவர் தங்கள் தங்கள் அர்த்தத்தை புரிந்து கிறிஸ்தவ மார்க்கத்தை வியாபாரமாக்கி முட்செடியாக வளர்ந்து கிறிஸ்தவ மதமாக செழித்து ஓங்கி - தேவாதி தேவனுக்கு முன்பாக பயமும் நடுக்கமும் பயபக்தியும் இல்லாமல் கூச்சலும் உருமலும் போட்டு தொழுகையை நைட் க்ளப் போல மாற்றி அநேகரை வழிதப்ப செய்து கொண்டிருப்பது வேதனை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக