திங்கள், 7 அக்டோபர், 2019

#543 - திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

#543 *மத்தேயு 26 : 29 இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். - நவமானதாய்?  விளக்கவும்*

*பதில்*
பூமியில் கிறிஸ்து தன் சீஷருடன் இருந்த கடைசி வேளையின் வார்த்தைகள்.

பஸ்காவில் இப்படி இனி பங்கெடுக்கப்போவதில்லை. சிலுவையின் மரணத்தோடு பஸ்கா முறை / மோசேயின் நியாயபிரமான முறை முடிவுக்கு வந்துவிடுகிறது (ரோ. 10:4)

சில மணிநேரங்களில் அவர் சிலுவையில் அறையப்படுவதை அவர் அறிந்திருந்தார்.

ஆனால் நவமான (புதியது) வகையில் திராட்சை இரசத்தை பருகுவேன் என்கிறார்.

கர்த்தருடைய பந்தியில் திராட்சை இரசமானது புதிய உடன்படிக்கையை நினைவுபடுத்துகிறது (1கொரி. 11:25)

கிறிஸ்து ஆட்சி செய்கிறார் என்று பவுல் கூறுகிறார் (I கொரி. 15:25).

சபையானது தேவனுடைய இராஜ்ஜியம். கிறிஸ்துவின் இராஜ்யத்தில் நாம் இருக்கிறோம் (கொலோசெயர் 1: 13-14).

இவ்வாறு நாம் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குபெறும் போது ஒருவருக்கொருவர் மற்றும் நம்முடைய தேவனுடன் பகிர்ந்து கொள்கிறோம். "நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்."(I கொரிந்தியர் 10: 16-17).

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக