சனி, 5 அக்டோபர், 2019

#542 - ஊழியருக்கு அப்படியே கீழ்படிய வேண்டுமா?

#542 - *ஊழியருக்கு அப்படியே கீழ்படிய வேண்டுமா?*

ஒரு சபையின் ஊழியர், செய்தியின் போது ஊழியர் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும் கிணற்றில் விழ சொன்னாலும் விழ வேண்டும் யோசிக்ககூடாது, ஊழியர்களின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் நன்மையா தீமையா என யோசிக்க கூடாது அதற்கான விளைவினை ஊழியக்காரர் தேவனிடம் பெற்றுக்கொள்வார் என்று சொன்னார்.

இதனை பற்றி வேதத்தின்படி விளக்குங்கள்.

*பதில்*

இதில் இரண்டு வகை அடங்கியுள்ளது. கீழே உள்ள வசனங்களை முழுமையாக படித்தபின் பதிலையும் படிக்கவும்.

*பகுதி-1*
எபி 13:17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

நீதி 5:13 என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!

பிலி 2:12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.

பிலி 2:29 ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.

1தெச 5:12-13 அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.

1தீமோ 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

*கவனிக்கவும் – 1*
தேவ வசனத்தை போதிக்கிறவர்களை கனம் பண்ண வேண்டியது அவசியம்.

அவர்கள் சொல்லும் தேவ வார்த்தைக்கு செவி கொடுப்பது அவசியம். இல்லையென்றால் வசனத்திற்கு எப்போது கீழ்படிதல் வரும்?

சபை மூலமாக சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டும் என்பது தேவனுடைய நீதி (எபே 3:10)

உங்களுடைய வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அவர்களுக்கு பங்கு இருக்கிறது (யாக் 3:1)

உங்களுக்காக எந்நேரமும் ஜெபிக்கிறவர்களாகையால் அவர்களுக்கு கீழ்படிவது அவசியம் (எபி 13:17)


*பகுதி – 2*
எபி 13:7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

2தெச 3:14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.

2Th 3:6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

Rom 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.

1 Co 5:11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

Tit 3:10-11 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.

தசமபாகத்திலும் கூட்டத்திற்கு கூட்டம் பணம் வசூலில் ஈடுபடுபவர்களை குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஊழியத்தை காட்டிலும் பணம் சேர்ப்பதே நோக்கம் (பிலி 3:19)

காணிக்கையை வலியுறுத்துவது ஊழியரின் கடமை – அந்த வலியுறுத்தல் வேதத்தின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டிருக்கவேண்டும் (1கொரி 16:1-3, 2கொரி 8:2, 9:5, 7, 13)

தசமபாக வசூலுக்காகவே அவசர அவசரமாக தன் மகனை ஊழியக்காரனாக்கி பக்கத்து ஊரில் உள்ள அரசாங்க ஊதியக்காரர்கள் மத்தியில் தன் கிளையை நிறுவின பிரபல ஊழியரும் உண்டு.

பல நிறுவனங்கள் நடத்தும் வேதாகம கல்லூரியில் படித்து வெளியே வருபவர் அந்த நிறுவன ஊதியக்காரராக வெளியே வருவாரேயன்றி – தேவனுடைய ஊழியக்காரனாக உருவெடுப்பது மிக கடினம். தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்தி அதற்கேற்ற வசனங்களை மெறுகேற்றி காலங்களைப் *பகுத்து போதிக்கப்படாமல்* வெளியே வருபவர்கள் *தேவ வசனத்தை கலப்பாக போதித்து அநேகரை நித்திய ஜீவப்பாதையினின்று திசைதிருப்பி விடுவர் (2கொரி 2:174).

பகுத்துப் போதிக்க தெரியாதவர் தான் இன்னமும் தசமபாகத்தை வலியுறுத்துபவர்கள். (தசமபாகத்தை குறித்த விபரங்களுக்கு பதில் #503, 351, 281, 94 ஆகிய பதிவுகளை வாசிக்கவும்)

இப்படி சத்தியத்தை அறியாமல் போதிக்கும் ஊழியரின் போதனையை கேட்டு கீழ்படிந்தால் – கேட்பவர்களும் நித்திய ஜீவனை இழந்து போக வாய்ப்பு உள்ளது.

ஆகவே – வேதாகமத்தை எப்போதும் கேட்பவர்கள் படிக்க வேண்டும்.
ஊழியர் மீது அல்ல - தேவன் மீது விசுவாசம் வைக்க வேண்டும்.
பேசப்படும் சத்தியத்தையும் – அவரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவர் வாழ்க்கை முறை சரியில்லையென்றால் – தவறான நபர்.

எதை கடைபிடிக்கிறாரோ – அதை தான் எந்த ஊழியரும் போதிக்கவேண்டும்.
எதை போதிக்கிறாரோ – அதை அவர் கடைபிடிக்க வேண்டும். (அப் 26:29, கலா 4:12, 1பேது 2:21, 1யோ 2:6, பிலி 2:5, 1கொரி 11:1, 1கொரி 4:16, பிலி 3:17, 1தெச 1:6, 2தெச 3:9)

மத் 23:3ஐ மேற்கோள் காட்டி தங்கள் சகல அசுத்தத்திலும் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் மத் 23:3 கிறிஸ்தவனுக்கு சொல்லப்பட்டது அல்ல !!!

இரட்சிப்பை இழந்து போகாமல் சரியான போதனைக்கு கீழ்படிவது முக்கியம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக