#541 - *சாலமன் ராஜாவின் ஆட்சி பற்றி கூறுங்கள் ஐயா*
*பதில்*
தாவீதுக்கு
பிறகு சாலமோன் ராஜாவை போல ஒரு செழிப்பானவர் யாரும் இல்லை என்றே கூறமுடியும்.
சாலொமோனின் ஆட்சியை அவருடைய ஞானத்தின் காரணமாக
முன்னோடியில்லாத செழிப்பின் சகாப்தமாக பார்க்கிறோம்.
இது தேவனால்
அவருக்கு வழங்கப்பட்ட ஒரு ஆசீர்வாதம்
(I இராஜா 3: 9).
சாலொமோன் தனது சாம்ராஜ்யத்தை 12 மாவட்டங்களாக
மறுசீரமைத்தார், எருசலேமில் அதிகாரத்தை மையப்படுத்தும்படி சகல ஜனங்களின் எல்லைகளை வகையறுத்தார்.
ஒவ்வொரு
பிரிவினரின் எண்ணங்களையும் பூர்த்திப்படுத்தவும் தாம் உறவு வைத்துக் கொண்ட நாடுகளிலும்
உறவை மேம்படுத்தவும் மனைவிகளை திருமணம் செய்வதற்கான கொள்கையைத் தொடர்ந்தார்.
சாதாரண
நடைமுறை ஜனங்களின் வழக்குகளில் கூட தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் (1 இரா 3:26).
1இரா 4:32-34 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள்
முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும்,
மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும்
வாக்கியங்களைச் சொன்னான். சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து
நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.
சாலொமோனின் கீழ் இஸ்ரேல் வளமாக வளர்ந்தது என்று வேதம் கூறுகிறது, பிராந்தியத்தில் பிராந்திய
வர்த்தகம் அதிகரித்ததால் வலுவான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது
என்பதற்கான சான்றுகள் உள்ளன.
செல்வம் அவருடைய கருவூலத்தில் ஊற்றப்பட்டு, சாலொமோன்
தாவீதுக்கு தேவனின் வாக்குறுதியை நிறைவேற்ற ஏதுவாக இருந்தது. தேவ ஆலயம் கட்டுவதற்கு இன்றைய
நாணய மதிப்பின் படி சுமார் அநேக கோடிகளை சேகரிக்க முடிந்தது.
திட்டம் முடிந்ததும், எருசலேமின் தேவ ஆலயம் மகிமையாக கட்டி முடிக்கப்பட்டது. சாலமன் கட்டிய ஆலயம்
எருசலேமின் ஆன்மீக மையமாக மாற்றப்பட்டது.
அதே சமயம், மன்னர் தனது ராஜ்யத்தைப்
பாதுகாப்பதற்காக கோட்டைகளையும் கட்டினார்.
இவ்வளவு செழிப்பும் வளமும் அறிவும் வளர்ந்த போது – அந்நிய பெண்களோடே கலந்தால் அவர்கள் நிச்சயம் சத்தியத்தை விட்டு சோரம்
போக பண்ணுவார்கள் என்ற தேவ கட்டளையை மீறினதால் தன் வாழ்நாளில் உலகிற்கே புத்திமதி
சொன்ன சாலமோன் ஞானிக்கு புத்தியற்று தன் கடைசி நாட்களில் விக்கிரக ஆராதனைக்காரனானார்
என்பது அவரின் கீழ்படியாமையின் வீழ்ச்சி நமக்கு எப்போதும் நினைவில்
வைத்திருக்கவேண்டிய பாடம்.
யாத் 34:15 அந்தத்
தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப்
பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்;
ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;
யாத் 34:16 அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக்
கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள்
தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன்
குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
1இராஜா 11:1-12 ராஜாவாகிய
சாலொமோன், பார்வோனின்
குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும்,
ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள்
உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள்
தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்;
சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்;
அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.
சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப்
பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன்
தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே
உத்தமமாயிருக்கவில்லை.
சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும்
பின்பற்றினான்.
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப்
பின்பற்றாமல், கர்த்தரின்
பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின்
அருவருப்பாகிய காமோசுக்கும்,
அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.
இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நிய
ஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு விசை
தரிசனமாகி, அந்நிய தேவர்களைப்
பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை
விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,
அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல்
கோபமானார்.
ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என்
உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால்,
ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை
உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.
ஆகிலும் உன் தகப்பனாகிய
தாவீதினிமித்தம், நான்
அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று
அதைப் பிடுங்குவேன்.
என்ற
மேற்படி வசனங்கள் நம் திருமணத்திலும் வாழ்க்கையிலும் எப்போதும் பொிய பாடமாக
வைக்கப்பட்டிருக்கிறது !!!
*Eddy Joel*, PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*
கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில்
இணைய:
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
அணைத்து
கேள்வி பதிலையும் காண joelsilsbee
blogspot என்று Google செய்து
பார்க்கவும். அதன் நேரடி லிங்க் Whatsappன் சில
விதிமுறைகளால் பகிரமுடியவில்லை
**
வீடியோ செய்திகளுக்கு YouTube
Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக