பகுதி 46 ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ளுதல் (பாடல்)
புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் தேவனை துதித்து பாடும் போது இசையோடு பாட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறாரா?
தேவனை பாடல் மூலமாக எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்
பிதாவை புதிய ஏற்பாட்டின் சத்தியத்தின் படி இருதயத்தில் இருந்து தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை வசன ஆதாரத்தோடு கற்றுக் கொண்டு வருகிறோம்
நாம் பாடல் பாடும் போது நடனம்(ஆடுவதற்கு) பண்ண தேவன் கட்டளை கொடுக்கவில்லை என்று கற்றுக் கொண்டு இருக்கிறோம்
நாம் தேவனை தொழுது கொள்ளும் போது பாடல் மாத்திரம் பாட தேவன் நம்மை அனுமதித்து இருக்கிறார் நடனம் பண்ண அனுமதிக்கவில்லை
இப்போது கிறிஸ்துவின் பிரமாணத்தில் நாம் பாடல் பாடும் போது இசையை இசைத்து பாட வேண்டுமா? என்பதை கற்றுக் கொள்வோம்
இசைக்கருவிகளை இசைத்து பாடுவதற்கு தேவன் நம்மை அனுமதித்து இருக்கிறாரா?
நித்திய ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமான வாசல் அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர் மாத்திரமே அந்த சிலரில் நாமும் ஒருவராக இருக்க வேண்டும்?
மத்தேயு 7:14 ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
ஆதியாகம புஸ்தகத்தில் இருக்கிற பரிசுத்தவான்கள் யாரும் பாடல்கள் மூலமாக தேவனை மகிமைப் படுத்தினார்கள் என்று எந்த ஒரு வேதாகம பதிவும் அதில் இல்லை
மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் இசையோடு பாடுங்கள் என்று இஸ்ரவேலர்களுக்கு தேவன் எந்தவொரு கட்டளையும் கொடுக்க வில்லை
இஸ்ரவேல் ஜனங்கள் வீதிகளிலும் தெருக்களிலும் இசையோடு ஆடி பாடினாலும் அவர்கள் ஆசரிப்பு கூடாரத்திலோ தேவாலயத்திலோ அப்படி பட்ட காரியத்தை அவர்கள் ஒரு போதும் செய்தது இல்லை
தாவீதின் காலத்தில் தன்னை துதித்து பாடக்கூடிய காரியங்களில் தேவன் சகலத்தையும் ஒழுங்கு செய்தார்
லேவி கோத்திரத்தை சேர்ந்த ஆசாரியர்களே தேவன் அவர்களுக்கு சொன்ன இசைக்கருவியின் மூலம் தேவாலயத்தில் தன்னை தொழுது கொள்ள வேண்டும் என்கிற கற்பனையை தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் தாவீதுக்கு கொடுத்தார்
தாவீது அதற்கான சகல காரியத்தையும் ஒழுங்கு செய்தார்
தாவீது சங்கீதம் எழுதும் போது கூட அதை ஆசாரியர்களிடம் கொடுத்து அதை தேவனுடைய சமூகத்தில் பாடும் படி ஆசாரியர்களிடம் தான் கொடுப்பார்
1 நாளா 16:7 அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:
நாம் தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்று தேவன் தான் தீர்மானிக்கனுமே தவிர மனுஷன் தீர்மானிக்க கூடாது
தேவனை என்ன கட்டளையிட்டு இருக்கிறாரோ அதை கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ தேவன் நம்மை ஒரு போதும் அனுமதிக்கிறது இல்லை
நியாயப்பிரமாண புஸ்தகத்தில் ஆசாரியர்கள் தூப பீடத்தில் தூபம் காட்டுவதற்கு ஆசரிப்பு கூடாரத்தில் வெளியே உள்ள பலிபீடத்தின் அக்கினியை எடுத்து தூப கலசத்தை நிரப்பி அதின் மேல் தூப வர்க்கம் போட்டு தான் பரிசுத்த ஸ்தலத்தில் தூபம் காட்ட வேண்டும்
எண் 16:46
மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய்,,,,
நாதாபும் அபியூவும் கர்த்தர் தங்களுக்கு கட்டளையிடாத அந்நிய அக்கினியை கொண்டு வந்தார்கள்
லேவி 10:1 பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
லேவி 10:2 அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
எல்லாமே அக்கினிதான் பலிபீடத்தில் இருக்கக்கூடிய அக்கினி வித்தியாசமாகவா இருக்க போகிறது
அப்படியென்றால் ஏன் அவர்கள் செத்தார்கள்?
கர்த்தர் தங்களுக்கு கட்டளையிடாத அந்நிய அக்கினியை கொண்டு வந்ததினாலே கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் செத்தார்கள்
தேவனை தொழுது கொள்ள கூடிய காரியங்களில் நம்முடைய அறிவை பயன்படுத்த கூடாது
இன்றைக்கு அநேக சபைகளில் கர்த்தர் கட்டளையிடாத அநேக அந்நிய அக்கினிகள் உள்ளே இருக்கிறது
தேவன் பலிபீடத்திலுள்ள அக்கினி என்று ஒரு அக்கினியை பற்றி சொல்லும் போது மற்ற அக்கினிகள் தேவை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
தேவன் நோவாவிடம் கொப்பேரு மரத்தால் பேழையை உண்டு பண்ணு என்றால் மற்ற மரங்கள் எவ்வளவு வாசனை உடையதாகவும் பலம் நிறைந்ததாகவும் இருந்தாலும் அது தேவனால் புறக்கணிக்கப்பட்டது என்பதை உணர்ந்து தேவன் சொன்ன படியெல்லாம் செய்து முடித்தார்
தேவன் வனாந்தரத்தில் சாதாரணமாக கிடைக்கிற மரம் தான் சீத்திம் மரம் அந்த மரத்தினால் ஆசரிப்பு கூடாரத்தின் பணி முட்டுகளை செய்ய சொன்ன போது மோசே கேள்வி எதும் கேட்காமல் தேவன் சொன்னபடியெல்லாம் செய்து முடித்தார்
தேவன் ஒரு கட்டளையை கொடுத்து விட்டார் என்றால் மற்றவைகள் புறக்கணிக்கப்பட்டது என்று அர்த்தம்
மறுபடியும் முக்கியமான சத்தியத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் தேவனுடைய வார்த்தையோடு ஒரு வார்த்தையை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் நமக்கு அனுமதி இல்லை
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பிரமாணத்தில் இசையோடு பாடுவதற்கு அனுமதி இருக்கிறதா?
புதிய ஏற்பாட்டில் இசைக்கருவிகளை பற்றி தேவன் என்ன சொல்லுகிறார்?
எந்த இசைக்கருவியை யாராவது ஒருவர் பயன்படுத்தினால் சத்தமிடும் ஆனால் அது உயிர் இல்லாதது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
1 கொரி 14:7அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால்,.......
கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை அன்பு இல்லாதவர்களுக்கு தேவன் ஒப்பிடுகிறார் அதினால் எந்த பிரயோஜனமும் இல்லை
1 கொரி 13:1.......... , அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் இருதயத்தில் இருந்து நாம் அவரை ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ள வேண்டும் என்றால் எதற்காக உயிரில்லாத வாத்திய கருவிகள்?
பிதாவாகிய தேவன் ஜீவனுள்ளராக இருக்கிறார்
எபி 3:12 சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
இயேசு கிறிஸ்து ஜீவனுள்ளவராக இருக்கிறார்
1 பேதுரு 2:4....... விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
சபை ஜீவனுள்ள தேவனுடைய சபை என்று அழைக்கப்படுகிறது
1 தீமோத்தேயு 3:15... அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.
கிறிஸ்தவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள்
ரோம 9:26....... இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம்
2 கொரி 6:16 ......அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே,
புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் சகலமும் ஜீவனுள்ளதாக இருக்கிறது
நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம் அந்த ஆலயத்தில் உயிரில்லாத வாத்திய இசைக்கருவிகளுக்கு என்ன வேலை?
தேவன் நமக்கு என்ன கட்டளையிட்டு இருக்கிறார்?
கேள்வி இது தான் நாம் எப்படி பாட வேண்டும்?
I) இசையோடு மாத்திரம் பாட வேண்டுமா?
2) இசையை இசைத்து வாயின் மூலமாக பாடல் பாட வேண்டுமா?
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் உபதேசம் இசையோடு பாடல் பாட வேண்டும் என்று போதிக்கிறதா?
கீழே உள்ள வசனத்தில் பவுலும் சீலாவும் வாயினால் மாத்திரம் பாடினார்களா? அல்லது இசையை இசைத்து பாடல் பாடினார்களா?
சிறைச்சாலையில் பவுலும் சீலாவும் தேவனை துதித்து பாடினார்கள்
Act16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
பவுலும் சீலாவும் பாடினார்களா அல்லது ஏதாவது இசை கருவிகளோடு இசைத்து பாடினார்களா?
வேத வாக்கியத்தில் பவுலும் சீலாவும் பாடினார்கள் என்று தான் இருக்கிறது
இசைத்து பாடினால் தான் உற்சாகம் வரும் கைதட்டி பாடினால் தான் உற்சாகம் வரும் என்று அநேகர் சொல்லுகிறார்கள் இங்கே அவர்கள் தங்கள் வாயினால் தேவனை துதித்து பாடின போது அந்த இடமே அசைந்தது
எபேசு சபையின் விசுவாசிகளுக்கு பவுலின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட கட்டளை என்ன?
Eph5:19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி ,
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
எபேசு சபையின் விசுவாசிகள் பாடினார்களா அல்லது இசை கருவிகளோடு இசைத்து பாடல் பாடினார்களா?
வேத வாக்கியத்தில் எபேசு சபையின் விசுவாசிகள் பாடும் படி மாத்திரம் தான் கட்டளை பெற்று இருக்கிறார்கள்
பாடல் எங்கிருந்து வர வேண்டும்?
இருதயத்தில் இருந்து வர வேண்டும்
கொலோசெ சபையின் விசுவாசிகளுக்கு பவுலின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட கட்டளை என்ன?
Col3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
கொலோசெ சபையின் விசுவாசிகள் பாடினார்களா அல்லது இசையை இசைத்து பாடல் பாடினார்களா?
வேத வாக்கியத்தில் கொலோசெ சபையின் விசுவாசிகள் பாடும் படி மாத்திரம் தான் கட்டளை பெற்று இருக்கிறார்கள்
பாடல் எங்கிருந்து வர வேண்டும்?
இருதயத்தில் இருந்து வர வேண்டும்
இயேசு கிறிஸ்து சபையின் நடுவில் என்ன செய்கிறார்?
Heb 2:12 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
இயேசு கிறிஸ்து சபையின் நடுவில் பாடினாரா அல்லது இசை கருவிகளோடு இசைத்து பாடல் பாடினாரா?
வேத வாக்கியத்தில் சபையின் நடுவில் பாடினார் என்று தான் இருக்கிறார்
கிறிஸ்தவன் மகிழ்ச்சியாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Jam 5:13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் பாடல் பாட வேண்டுமா அல்லது இசைக் கருவியோடு இசைத்து பாடல் பாட வேண்டுமா?
வேத வாக்கியத்தில் பாடல் பாட வேண்டும் என்று மாத்திரம் தான் இருக்கிறது
அந்த வசனத்தில் பாடலுக்கு முன்பதாக இசையோடு என்ற வார்த்தையை சேர்த்து நான் பாடல் பாடுவேன் என்றால் அது கிறிஸ்துவின் உபதேசமா?
நீதி 30:5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
நீதி 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
இசையை இசைத்து இசையின் மூலமாக மாத்திரம் நாம் தேவனை மகிமைப்படுத்த தேவன் அனுமதிக்கவில்லை
இசைக்கருவியை இசைத்து வாயின் மூலமாக பாடுவதையும் தேவன் அனுமதிக்கவில்லை
இசைக்கருவிகள் இல்லாமல் இருதயத்தில் இருந்து பக்தியோடு வாயின் மூலமாக பாடல் பாட மாத்திரமே தேவன் அனுமதி அளித்துள்ளார்
நீங்கள் இசைத்துக் கொண்டே பாடல் பாடினார்கள் என்று சொல்லுவீர்கள் என்றால் அது கிறிஸ்துவின் உபதேசம் அல்ல அப்படி நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால் நீங்கள் கிறிஸ்தவர்களும் இல்லை
தேவனுடைய வார்த்தையோடு ஒரு வார்த்தையை கூட்டும் போது குறைக்கும் போது அது பிசாசுகளின் உபதேசம்
அநேகருக்கு இந்த உபதேசங்கள் புதிதாக இருக்கலாம் அல்லது கடினமானதாக இருக்கலாம் ஆனால் இது தான் புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் உபதேசம்
உங்களுக்கு நித்திய ஜீவன் வேண்டும் என்றால் தேவனுடைய சட்ட திட்டங்களை நீங்கள் பின்பற்றி தான் ஆக வேண்டும்
கர்த்தருக்கு சித்தமானால்
சபை கூடி வரும் போது தனிநபராக பாடல் பாட வேண்டுமா அல்லது சபையாக சேர்ந்து பாடல் வேண்டுமா என்கிற கிறிஸ்துவின் உபதேசத்தை கற்றுக் கொள்வோம்
அரியேல் பர்னபாஸ்
சூரம்பட்டி, ஈரோடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக