வெள்ளி, 13 செப்டம்பர், 2019

#458 - தினசரி நாம் முழங்கால் போட்டுதான் தேவனிடம் ஜெபம் செய்ய வேண்டுமா?

#458 - *தினசரி நாம் முழங்கால் போட்டுதான் தேவனிடம் ஜெபம் செய்ய வேண்டுமா?* ஆராதனையின் போது முழங்காலில் தான் ஜெபிக்க வேண்டுமா? விளக்கம் தாருங்களேன்

*பதில்* :
முழங்கால் போடுவதும், சாஷ்டாங்கமாய் விழுவதும், எழுந்து நிற்பதும் நம் தாழ்மையை காண்பிக்கிறது.

வேதாகமத்தில் பலவேறு காலக்கட்டத்தில் ஜெபிக்கும் போது கீழ்கண்டவாறு இருந்த வகையை கவனிக்கவும்:

1)உட்கார்ந்து ஏறெடுக்கப்பட்ட ஜெபம் 1நாளா. 17:16
சமூகத்திலிருந்து என்று தமிழில் மொழிபெயர்க்கப்ட்டிருக்கிறது. ஆனால் உட்கார்ந்து என்பது அதன் சரியான வார்த்தை. ஆங்கில வேதாகமத்தில் அதை சரியாக மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

2)நின்றுக்கொண்டு ஏறெடுத்த ஜெபம் நெகேமியா 9:5

3)நடந்து கொண்டு ஏறெடுத்த ஜெபம் 2இரா. 4:35

4)தாழ விழுந்து அதாவது முழங்காலில் நின்று சரீரத்தை தரையோடு சாய்த்து தலை படும்படி ஏறெடுத்த ஜெபம் யாத். 34:8

5)கைகளை உயர்த்தி ஏறெடுத்த ஜெபம் 2நாளா. 6:12-13

6)முழங்காலில் நின்று ஏறெடுத்த ஜெபம் எஸ்றா 9:5

7)சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து ஏறெடுத்த ஜெபம் மாற்கு 14:35

ஜெபிக்க கற்றுத் தாரும் என்று இயேசுவிடம் சீஷர்கள் கேட்டபோது அவர்களுக்கு சரீர பாவனையை அல்ல வார்த்தையை சொல்லிக்கொடுத்தார் (மத். 6:9)

மகத்துவமுள்ள தேவனிடத்தில் நாம் ஜெபிக்கும் போது மனமேட்டிமையில்லாமல் நம்மை தாழ்த்தி ஜெபிப்பது உகந்தது.

சரீர பாவனையை காட்டிலும் பொிய பொிய நட்சத்திர ஊழியக்கார்கள் கூட தாங்கள் பிதாவினிடத்தில் தான் ஜெபிக்கவேண்டும் (மத். 6:9) என்பதை அறியாமல் இயேசுவே ஆவியானவரே பிதாவே கர்த்தாவே ஆண்டவரே என்று போட்டு தங்கள் ஜெபத்தில் குழப்புவதை கவனிக்கும் போது வேதனை தான்.

பிதாவே என்று ஆரம்பித்து இயேசுவின் நாமத்தில் முடிக்க தெரிகிறது அவர்களுக்கு ஆனால் யாரிடத்தில் ஜெபிக்கிறோம் என்ற அர்த்தம் அறியாமல் ஜெபிக்கிறது அவர்களின் அறியாமையை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக