வெள்ளி, 13 செப்டம்பர், 2019

#459 - வேதாகமத்தை எப்படி புரிந்து கொள்வது?

#459 - *வேதாகமத்தை எப்படி புரிந்து கொள்வது?*

*பதில்* :
சுருக்கமாக அதன் அமைப்பை எழுதுகிறேன்.

*பழைய ஏற்பாடு*  -  மொத்தம் 39 புத்தகங்கள்
*சரித்திர புத்தகங்கள்* (5 புத்தகங்கள்):
(படைப்புமுதல் பூர்வ கால இஸ்ரவேல் தேசம் உருவானதுவரை)
_ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்_

*சரித்திரப் புத்தகங்கள்* (12 புத்தகங்கள்):
(வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் நுழைந்ததைப் பற்றியும், அதற்குப்பின் நடந்த சம்பவங்களைப் பற்றியும்)

_யோசுவா, நியாயாதிபதிகள், ரூத்_

(எருசலேமின் அழிவுவரை இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரம்)

_1, 2 சாமுவேல்; 1, 2 ராஜாக்கள்; 1, 2 நாளாகமம்_

(பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப்போன யூதர்கள் திரும்பி வந்தபின் நடந்த சம்பவங்கள்)

_எஸ்றா, நெகேமியா, எஸ்தர்_


*கவிதைநடை புத்தகங்கள்* (5 புத்தகங்கள்):
(பொன்மொழிகளும் பாடல்களும் அடங்கிய தொகுப்பு)

_யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு_


*தீர்க்கதரிசனப் புத்தகங்கள்* (17 புத்தகங்கள்):
(கடவுளுடைய மக்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்)

_ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா_


“*புதிய ஏற்பாடு*”  -  மொத்தம் 27 புத்தகங்கள்
*சுவிசேஷ புத்தகங்கள்* (4 புத்தகங்கள்):
(இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்)

_மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்_

*வரலாறு* (1 புத்தகம்):
(கிறிஸ்தவ சபையின் ஆரம்பம், மிஷனரி பயணங்கள்)

_அப்போஸ்தலர் நடபடிகள்_

*நிருபங்கள் / கடிதங்கள்* (21 புத்தகங்கள்):
(கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்)

_ரோமர், 1, 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1, 2 தெசலோனிக்கேயர்_

(தனிப்பட்ட முறையில் கிறிஸ்தவ சகோதரருக்கு எழுதப்பட்ட கடிதங்கள்)

ஊழியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் தொகுப்புகள் அடங்கியவை -

_1, 2 தீமோத்தேயு, தீத்து_

அடிமையானவன் மீட்கப்பட்டு சகோதரனான சீஷனுடைய மீட்பை குறித்த அன்பின் கடிதம்.  

_பிலேமோன்_

(பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்)

_எபிரெயர், யாக்கோபு, 1, 2 பேதுரு 1, 2, 3 யோவான், யூதா_

*தீர்க்கதரிசன் புத்தகம்*
(சீக்கிரத்தில் நடக்கப்போவதைப் பற்றி அப்போஸ்தலன் யோவானுக்குக் காட்டப்பட்ட தரிசனங்கள்)

_வெளிப்படுத்துதல்_ (1 புத்தகம்):

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக