புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்தில் தேவனை துதித்து பாடும் போது ஆட (நடனம்) வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு இருக்கிறதா?
தேவனை பாடல் மூலமாக எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்
நாம் எதை செய்தாலும் கிறிஸ்துவின் அதிகாரம் அதில் இருக்கிறதா என்பதை கண்டு பிடித்து அதற்கு பிறகு தான் அதற்கு கீழ்ப் படிய வேண்டும்
கொலோ 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
நாம் வார்த்தையினாலும் கிரியையினாலும் எதை செய்தாலும் அதில் கிறிஸ்துவின் அதிகாரம் அதில் இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்
கிறிஸ்துவின் அதிகாரம் இல்லாத எது ஒன்றையும் பிதா ஏற்றுக் கொள்வதில்லை
நாம் எதை செய்தாலும் அது கிறிஸ்துவின் உபதேசத்தில் இருக்கிறதா என்பதையும் நாம் வேத வாக்கியத்தில் தேடி பார்க்க வேண்டும்
2 யோவா 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
நாம் கிறிஸ்துவின் உபதேசத்தில் மீறி நடப்பதற்கு தேவன் நமக்கு ஒரு போதும் அனுமதி கொடுப்பது இல்லை
அப்படி நடக்கிறவர்கள் கிறிஸ்துவை சேராதவர்கள்
அப்படி நடக்கிறவர்கள் கள்ள உபதேசங்களுக்கு செவி கொடுக்கிறார்கள்
தேவன் தம்மை கிறிஸ்தவர்கள் எப்படி பாட வேண்டும் என்கிற உபதேசத்தை கீழே உள்ள வேத வாக்கியங்களை கொண்டு அவர் நமக்கு கொடுத்து இருக்கிறார்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் பிரமாணம் எப்படி அவரை தொழுது கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு இருந்ததோ அந்த பிரமாணத்தை கிறிஸ்துவின் வருகை பரியந்தம் ஒரு வார்த்தையும் கூட்டாமல் குறைக்காமல் நாமும் கடைபிடிக்க வேண்டும்
எத்தனை தேசங்கள் அழிந்து போய் புதிதாக உருவாக்கப்பட்டாலும் எத்தனை கலாசாரங்கள் அழிந்து புதிய கலாசாரங்கள் வந்தாலும் தேவனுடைய சட்ட திட்டங்கள் பிரமாணங்கள் ஒரு போதும் அழியாது மாறாது
இஸ்ரவேல் ராஜாக்களுக்கு பிறகு உலகத்தை கட்டி ஆண்ட ராஜ்ஜியங்கள் எழும்பியது
1)அசீரிய ராஜ்ஜியம்
2)பாபிலோன் ராஜ்ஜியம்
3)மேதிய பெரிசியா ராஜ்ஜியம்
4)கிரேக்க சாம்ராஜ்ஜியம்
4)ரோம சாம்ராஜ்ஜியம்
இத்தனை சாம்ராஜ்யங்கள் எழும்பின போதும் மோசேயின் நியாயப் பிரமாணத்தின் சிறு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாக்கிலும் அவர்களால் அழிக்க முடியவில்லை
ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தைகளின் மீது அதிக கவனம் வைத்து பாதுகாக்கிறார் என்பதை கவனியுங்கள்
தேவன் தம்முடைய வார்த்தைகளின் மீது எவ்வளவு கவனம் வைத்து இருக்கிறார்?
மத் 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலு ள்ள தெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
தேவனுக்கு தெரியாமல் ஒரு எழுத்தின் உறுப்பாக்கிலும் அழிந்து போகாது
அநேகர் இன்றைக்கு தேவனுடைய வல்லமைகளை அறியாமல் புதிய ஏற்பாட்டில் நிறைய சத்தியங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது அநேக புஸ்தகங்கள் சேர்க்கப் பட வில்லை ஆராதனை நாள் எல்லாம் மாற்றப்பட்டு இருக்கிறது பெரிய மோசடி நடந்து இருக்கிறது நம்முடைய கையில் இருக்கிறது சுத்தமான வேதவாக்கியம் இல்லை என்கிறார்கள்
தேவ தூதர்கள் மூலமாய் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமணத்தையே தேவன் இன்றைக்கு வரை இவ்வளவு சிறப்பாக பாதுகாத்து வருகிறார் என்றால் புதிய ஏற்பாட்டை பற்றி என்ன?
எபி 2:2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க.
கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு எவ்வளவு சாட்சிகள் இருக்கிறது?
எபி 2:3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
எபி2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
கிறிஸ்துவின் பிரமாணம் யார் மூலமாய் அறிவிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது?
1) இயேசு கிறிஸ்து மூலமாய் அறிவிக்கப்பட்டது
2)அப்போஸ்தலர்களாலே உறுதியாக்கப்பட்டது
புதிய ஏற்பாட்டின் கிறிஸ்துவின் பிரமாணம் எப்படிப்பட்ட சாட்சியின் மூலம் உறுதியாக்கப்பட்டது?
1)அடையாளங்களினாலும்
2)அற்புதங்களினாலும்
3)பலவிதமான பலத்தசெய்கைகளினாலும்
4)தம்முடைய சித்தத்தின் படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும்
5) தேவன் தாமே சாட்சி கொடுத்துமாய் இருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பு
இவ்வளவு திரளான சாட்சிகளை கொடுத்து பெரிதான இரட்சிப்பை நமக்கு கொடுத்த தேவனால் புதிய ஏற்பாட்டு சத்தியத்தை பாதுகாக்க முடியாதா?
நிறைய பேர் சொல்லுகிறார்கள் தேவனால் பாதுகாக்க முடியவில்லை நாங்கள் கண்டு பிடித்து பாதுகாப்போம் என்கிறார்கள்
இன்னும் நிறைய பேர் வேத வாக்கியத்தை விசுவாசியாமல் 2000 வருடங்கள் உள்ள சரித்திர நிகழ்வுகளில் சில வேத புத்தகங்கள் எங்கே காணமல் போய்விட்டது ஆராதனை முறைமைகள் எங்கேயோ மாற்றப்பட்டு இருக்கிறது என்று இன்றுவரை அதை தேடிக்கொன்டே இருக்கிறார்கள்
4500 வருடங்களாக மோசேயின் பிரமாணத்தை இன்று வரை தேவன் பாதுகாத்துக் கொண்டு வருகிறார் என்றால் அவருடைய வல்லமை எப்படி பட்டது என்பதை சிந்தித்து பாருங்கள்
அதனால் மோசேயின் பிரமாணம் இன்றைக்கும் நம்முடைய கையில் பழைய ஏற்பாடாக பாதுகாப்பாக இருக்கிறது
அதனால் வேத வாக்கியங்களை முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள் அதை மாத்திரம் ஏற்றுக் கொள்ளுங்கள்
கேள்வி இது தான் நாம் எப்படி பாட வேண்டும்?
நமக்கு கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டு கட்டளை என்ன?
1) பாட வேண்டுமா?
2)பாடிக்கொண்டே ஆட (நடனம்) வேண்டுமா?
புதிய ஏற்பாட்டில் எப்படி பாடல் பாட வேண்டும் என்று கிறிஸ்துவின் உபதேசம் போதிக்கிறது?
கீழே உள்ள வசனங்கள் மாத்திரம் பாடலைப் பற்றிய கிறிஸ்துவின் உபதேசமாய் இருக்கிறது
சிறைச்சாலையில் பவுலும் சீலாவும் தேவனை துதித்து பாடினார்கள்
Act16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
பவுலும் சீலாவும் பாடினார்களா அல்லது ஆடிக்கொண்டே பாடினார்களா?
வேத வாக்கியத்தில் பவுலும் சீலாவும் பாடினார்கள் என்று தான் இருக்கிறது
அவர்கள் கைகளும் கால்களும் தொழு மரத்தில் மாட்டப்பட்டு இருந்தது
எபேசு சபையின் விசுவாசிகளுக்கு பவுலின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட கட்டளை என்ன?
Eph5:19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
எபேசு சபையின் விசுவாசிகள் பாட வேண்டுமா அல்லது ஆடிக்கொண்டே பாட வேண்டுமா?
வேத வாக்கியத்தில் எபேசு சபையின் விசுவாசிகள் பாடும் படி தான் கட்டளை பெற்று இருக்கிறார்கள்
கொலோசெ சபையின் விசுவாசிகளுக்கு பவுலின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட கட்டளை என்ன?
Col3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
கொலோசெ சபையின் விசுவாசிகள் பாட வேண்டுமா அல்லது ஆடிக்கொண்டே பாட வேண்டுமா?
வேத வாக்கியத்தில் கொலோசெ சபையின் விசுவாசிகள் பாடும் படி தான் கட்டளை பெற்று இருக்கிறார்கள்
இயேசு கிறிஸ்து சபையின் நடுவில் என்ன செய்கிறார்?
Heb 2:12 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
கிறிஸ்து சபையின் நடுவில் பாடினாரா அல்லது ஆடிக்கொண்டே பாடினாரா?
வேத வாக்கியத்தில் சபையின் நடுவில் பாடினார் என்று தான் இருக்கிறது
கிறிஸ்தவன் மகிழ்ச்சியாய் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Jam 5:13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
உங்கள் இருதயத்தில் இருந்து பதில் சொல்லுங்கள்
ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் பாட வேண்டுமா அல்லது ஆடிக்கொண்டே பாட வேண்டுமா?
வேத வாக்கியத்தில் பாட வேண்டும்
என்று தான் இருக்கிறது
நீங்கள் பாடிக்கொண்டே நடனம் பண்ண வேண்டும் என்று சொல்லுவீர்கள் என்றால் அது கிறிஸ்துவின் உபதேசம் அல்ல அப்படி நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால் நீங்கள் கிறிஸ்தவர்களும் இல்லை
தேவனுடைய வார்த்தையோடு ஒரு வார்த்தையை கூட்டும் போது குறைக்கும் போது அது பிசாசுகளின் உபதேசம்
பாடிக்கொண்டே ஆடிக்கொண்டு இருக்கிறவர்களைப் பற்றி என்ன?
மேலே சொன்ன வேதவாக்கியத்தில் இருந்து நீங்களே உணர்ந்து கொண்டு இருப்பீர்கள்
கர்த்தருக்கு சித்தமானால் இசையோடு பாடும் படி தேவன் நமக்கு கட்டளை கொடுத்து இருக்கிறாரா? என்று பார்ப்போம்
written by
Ariyel Barnabas
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக