சனி, 28 செப்டம்பர், 2019

#516 - தற்போது உள்ள கால கட்டத்தில் கிறிஸ்துவின் கட்டளைகளை எப்படி கைக்கொள்வது சற்று விரிவாக விளக்க வேண்டும் ஐயா...

#516 - *தற்போது உள்ள கால கட்டத்தில் கிறிஸ்துவின் கட்டளைகளை எப்படி கைக்கொள்வது சற்று விரிவாக விளக்க வேண்டும் ஐயா*...

*பதில்*
உலகம் என்றுமே பரிசுத்தத்திற்கு ஏதிராக தான் இருக்கும் (யோ. 17:14)

அவர்கள் தேவனை அறியாத வரைக்கும் – கிறிஸ்தவருக்கு போராட்டம் உண்டு (யோ. 15:19)

ஆரம்ப நாட்களில் ரோம பேரரசு கிறிஸ்தவர்களை குடும்பம் குடும்பமாக பிடித்து தீயிட்டு கொளுத்தினார்கள். DVDஐ கம்ப்யூட்டரில் எழுதவேண்டுமானால் பல வருடம் முன்பு NERO என்ற சாஃப்ட்வேர் அதன் பெயரை இந்த நினைவாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்துவதற்கு தயங்காமல் தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்ததற்கு காரணம் நமது கிறிஸ்துவானவர் மூலமாக மாத்திரமே பரலோகம் போக முடியும் என்பதை தீர்க்கமாக உணர்ந்ததால் (யோ. 14:6, 10:9)

அவராலேயன்றி இந்த உலகில் நம்மை பரலோகம் அழைத்து செல்ல ஒருவராலும் முடியாது என்பதை உணர்ந்ததால் எந்த எதிர்ப்பு வந்தாலும் உண்மையாய் அவரை பற்றிக்கொள்ள நமக்கு ஏதுவாகிறது (அப். 4:12)

எத்தனையோ மத தலைவர்களும் குருக்களும் வழிகாட்டிகளும் தன்னை கடவுள் என்று சொல்லிக்கொண்டவர்களும் இவர் தான் கடவுள் என்று வைத்து கும்பிடப்படுபவர்களும் மரியாள் உட்பட அனைவரும் தங்கள் நேரம் வந்தபோது மரித்துப்போனார்கள் - *இயேசு ஒருவரே* மரித்து அடக்கம் பண்ணப்பட்டு 3ம் நாள் உயிரோடு எழுந்தவர். (1கொரி. 15:2-4)

கிறிஸ்தவன் மாத்திரம் தன் நம்பிக்கைக்காக இதை சொல்லிக்கொள்வதல்ல கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்தது *சரித்திரம்*.  சரித்திரத்தை ஒருவரும் மாற்ற இயலாது. அது கற்பனையோ காவியமோ புராணமோ கதையாகவோ அல்ல பல நூறு வருடங்களுக்கு முன்னதாகவே தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டவைகளுமாக இது இருந்தது.

ஆகவே எதிர்ப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் நாம் கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்து மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் எடுத்து இரட்சிப்பின் பாதையில் வேதத்தின் படி வாழ்வது எந்த மனுஷனுக்கும் உகந்தது (மாற்கு 16:16, அப். 16:30-34)

கிறிஸ்துவுக்கு கீழ்படிவதை அரசாங்கம் தடுத்தபோது அவருக்காக இரத்தஞ்சிந்தியும் அதை பாக்கியமாக எண்ணினார்கள் ஆதி கிறிஸ்தவர்கள் (அப். 20:22-24)

உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத். 24:10-13)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக