சனி, 28 செப்டம்பர், 2019

#517 - அடுத்தவன் மனைவியை அபகரித்தும் பிரமாணத்தின்படி தாவீது ஏன் கொல்லப்படவில்லை?

#517 -  *அடுத்தவன் மனைவியை அபகரித்தும் பிரமாணத்தின்படி தாவீது ஏன் கொல்லப்படவில்லை?*

திரும்பி பாரதே என்ற கட்டளைக்கு பிறகு பின்னிட்டு பார்த்து உப்பு தூண் ஆனாள்  லோத் மனைவி..

அந்நிய அக்கினி கூடாது என்ற கட்டளையை மீறி அந்நிய அக்கினி கொண்டு வந்த நாதாபும் ஆபியும் கொல்லப்பட்டார்கள்...

லேவியரை தவிர வேறு யாரும் உடன்படிக்கை பெட்டியை தொட கூடாது என்பது கட்டளை.. கட்டளையை மீறி தொட்ட ஊசாவை கர்த்தர் கொன்றார்...

இப்படிப்படியாக தேவனுடைய கட்டளையை மீறியதால் தேவனால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொல்லப்பட்டவர்களை பற்றி
 சுமார் 24_க்கும் அதிகமான நிகழ்வுகளை வேதாகமம் பதிவு பண்ணி வைத்திருக்கிறது்...

இப்போது கேள்வி என்ன என்றால்:~

Lev 20:10   ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

என்பது தேவனுடைய கட்டளை இந்த கட்டளையை மீறி தவறு செய்த தாவீது ஏன் கொல்லப்படவில்லை...? .

(இத்தனைக்கும் தாவீது இரவும் பகலும் வேதத்தில் தியானமாக இருந்து இருக்கிறார். Ps 55:27 /104:34 /119:97

மற்றவர்கள் தேவனுடைய கட்டளையை கடைபிடிக்கவில்லை என்றால் கண்ணீர் விட்டார் என்றெல்லாம் வேதம் சொல்லுகிறதே  எப்படி ? Ps 119:136)

*பதில்*
அடுத்தவன் மனைவியை எடுத்துக்கொண்டதுமல்லாமல் அதை முன்னிட்டு தாவீது ஒரு கொலையையும் செய்திருந்தார் (2சாமு. 11:24)

இந்த பாவத்தை சுட்டிக்காட்டியபோது *நான் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தேன்*" என்று தாவீது சொன்ன வேளையில் *நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்* என்று நாத்தான் தீர்க்கதரிசி சொன்னதை நாம் கவனிக்க வேண்டும். கர்த்தர் அந்த பாவத்தை அவனுக்கு மன்னித்தார்.  (2சாமு. 12:13-14)

மரணத்திலிருந்து தேவன் தாவீதை தப்புவித்தாலும், அந்த செயலுக்கான தண்டனை தாவீதுக்கு கொடுமையாக கொடுக்கப்பட்டது.

2சாமு. 12:10 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

2சாமு. 12:11 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
2சாமு  12:12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.

பத்சேபாளின் மூலமாக பிறந்த குழந்தையும் மரித்தது. (2சாமு. 12:14-18)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக