#515 - *இயேசு தான் மெல்கிசேதேக்காக பழைய ஏற்பாட்டில் வந்தாரா? அப்படி தான் இருக்கும் என்று நான் சொல்கிறேன்*. உங்களது கருத்து என்ன?
எபிரெயர் 9 27: அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
எபிரெயர் 7:3 இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல்,தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
எபிரெயர் 7: 2 இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்.
இந்த வசனங்களில், அது அவரது பெயரை நீதியின் ராஜா & அமைதியின் ராஜா என்று விளக்குகிறது. பைபிள் சொல்கிறது, இயேசு நீதியின் ராஜா & சமாதானத்தின் ராஜா. இறுதியாக, மெல்கிசேதேக் ஒரு மனிதன் அல்ல என்றும் அவர் பழைய ஏற்பாட்டில் தோன்றிய கிறிஸ்து என்று சொல்கிறேன் - உங்கள் விளக்கம் என்ன?
*பதில்*
வேக வேகமாக சில பிடித்த வசனங்களை எடுத்துக்கொண்டு நமக்கு சாதகமாக வளைத்து கொண்டால் எல்லாமே சரியாக தோன்றும். வேதத்தை ஆராய்ந்து பார்த்தவர்கள் நற்குணசாலிகளானார்கள் !!
பொறுமையாக கடைசி வரை கவனமாக படிக்கவும்.
ஆரோன் குடும்பத்தில் பிறந்தவர் ஆசாரியராக வேண்டும் (யாத். 28:40-43)
இயேசு கிறிஸ்து நமக்கு நிரந்தர பிரதான ஆசாரியர் (எபி. 5:5, 3:1, 4:15, 7:26, 4:14)
இயேசு கிறிஸ்து – ஆரோன் குலத்தில் பிறந்தவர் அல்ல *யூதா கோத்திரத்தில்* பிறந்தவர் (எபி. 7:13-14)
நியாயபிரமாணத்தின்படி:
ஏற்படுத்தப்படுகிற பிரதான ஆசாரியனானவன் – மனுஷனால் மனுஷருக்காக ஏற்படுத்தப்படுகிறான். (எபி 5:1, யாத் 28:1). அவன் பெலவீனனாக இருக்கிறான் (எபி. 7:28, 9:7)
முதலாவது அவன் தன்னுடைய பாவத்திற்காக பாவநிவாரணம் செய்து தன்னை சுத்திகரித்துக்கொண்டு, பிற்பாடு மற்ற ஜனங்களின் பாவத்திற்காக அவன் பாவ நிவிர்த்தி செய்ய வேண்டும் (எபி. 5:1-3, 7:27)
மேலும் நியமிக்கப்பட்ட பிரதான ஆசாரியன் - அவன் காலத்திற்கு பின் வேறொவர் ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகிறது (யோ. 11:49)
ஆனால் இயேசு கிறிஸ்துவோ (மனுஷ முறைமையின்படி ஆரோன் வழியில் பிறந்த பெலவீனமுள்ளவரான பிரதான ஆசாரியராக ஏற்படுத்தப்படாமல் யூதா கோத்திரத்தில் பிறந்த) நிரந்திரமான பிரதான ஆசாரியராக தேவனால் ஏற்படுத்தப்பட்டார் (எபி. 7:16-19)
மெல்கிசேதேக்கை குறித்து - அவருடைய அப்பா அம்மாவின் தகவல் மற்றும் அவரின் பிறப்பு-இறப்பு செய்தியை பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் எழுதிவைக்கவில்லை (எபி. 7:3)
மெல்கிசேதேக் என்பவர் சாலேம் நாட்டின் இராஜா. அவர் தேவனுக்கு ஆசாரிய ஊழியம் செய்தவர் (ஆதி. 14:18) நியாயபிரமாண காலத்திற்கு முந்தைய காலத்தில் வந்தவர் !! கோத்திரங்களுக்கு முந்தைய காலத்தில் ஆசாரிய ஊழியம் செய்தவர் !!
அந்த முறைமைபடி கிறிஸ்துவும் நியாயபிரமாண முறைமைபடி இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறார் (எபி. 7:16)
கிறிஸ்து மனுஷனுடைய வித்தில் பிறந்தவர் அல்ல !! ரோ. 1:5
அவர் ஸ்திரீயின் வித்தாக உலகத்தில் வந்தவர் !! ஆதி. 3:15
அவர் உலக இரட்சகர், உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தவர் !! யோ. 1:29
சகல வல்லமையும் உள்ள தேவன் !! ரோ. 9:5, 1தீமோ. 3:16, 1யோ. 5:20, யோ. 20:28, எபி. 1:8-9, யோ. 1:1
மெல்கிசேதேக் மனுஷனால் பிறந்த மனிதன். பூமிக்குரிய ஒரு ஸ்தலத்திற்கு இராஜாவாக ஆட்சி செய்தவர். அவருடைய பிறப்பை குறித்தும் இறப்பை குறித்தும் வேதத்தில் எழுதப்படவில்லை.
ஆசாரிய ஊழியத்தை லேவியரும் ஆசாரியருமே நியாயபிரமானத்தின்படி செய்ய வேண்டியிருக்க யூதா குலத்தில் பிறந்த இயேசு கிறிஸ்து எப்படி பிரதாக ஆசாரியரானார் என்பதை மெல்கிசேதேக்கின் வரலாறை *ஒப்பிட்டு* எபிரேய ஆசிரியர் விளக்குகிறார்.
மெல்கிசேதேக் இயேசு கிறிஸ்து அல்ல !! மனிதனை தேவனுக்கு ஒப்பிடக்கூடாது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக