வெள்ளி, 27 செப்டம்பர், 2019

#513 - கிறிஸ்தவர்கள் அரசியலில் சேரலாமா?

#513 - *கிறிஸ்தவர்கள் அரசியலில் சேரலாமா?*  கிறிஸ்தவர்கள்.. கிறிஸ்தவர்களுக்கு நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்கும்..உறுதுணையாய் இருக்கும்...இவர்களுக்காய் போராடும் சி.என.ஐ. கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் கட்சியில் சேரலாமா?

*பதில்*
குறிப்பிட்ட எந்த கட்சியை குறித்தும் நான் எழுதக்கூடாது.

வேதத்தின் காரியங்களை கீழே பார்க்கலாம்.

கிறிஸ்தவர்கள் தீமைக்கு எதிராக நிச்சயம் பேச வேண்டும் - எபேசியர் 5:11

எனவே - அரசாங்க அதிகாரி பாவத்தில் ஈடுபடும்போது நாம் என்ன செய்வது? சுட்டிக்காட்ட வேண்டும் !

தாவீது செய்த பாவங்களை நாத்தான் தீர்க்கதரிசியால் கண்டிக்கப்பட்டார் - II சாமுவேல் 12: 1-15

சிலைகளை உருவாக்கியதற்காக யெரொபெயாம் ஒரு தீர்க்கதரிசியால் கண்டிக்கப்பட்டார் - I இரா. 13: 1-9

யோவான் - ஏரோதுவிடம் அவரது திருமணம் பாவமானது என்று கூறினார் - மத்தேயு 14: 1-4

பவுல் - பேலிக்ஸுக்கு நீதியையும், சுய கட்டுப்பாட்டையும், அவர் எதிர்கொள்ளும் தீர்ப்பையும் பற்றி கற்பித்தார் - அப்போஸ்தலர் 24:25

*தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கத்தைப் பயன்படுத்துவது வேதவசனங்களில் காணப்படுகிறது*.

யூத மக்களைப் பாதுகாக்க எஸ்தர் மூலம் ஒரு சட்டம் இயற்றப்பட்டது - எஸ்தர் 8: 1-14

பவுல் தனது குடியுரிமையைப் பயன்படுத்தி தவறான சிறைவாசத்திற்கு மன்னிப்பு கேட்கும்படி ஆட்சியாளரை கட்டாயப்படுத்தினார் - அப்போஸ்தலர் 16: 25-40

பவுல் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியான தண்டனையை தவிர்ப்பதற்காக தனது குடியுரிமையைப் பயன்படுத்தினார் - அப்போஸ்தலர் 22: 24-29

வுல் ஒரு படுகொலை சதித்திட்டத்தைத் தவிர்க்க அரசாங்கத்தின் தொடர்புகளைப் பயன்படுத்தினார் - அப்போஸ்தலர் 23: 12-33

பவுல் தனக்கு எதிரான வழக்கைத் தீர்ப்பதற்கு ஒரு சட்டத்தைப் பயன்படுத்தினார் - அப்போஸ்தலர் 25: 10-12

அரசாங்கமானது தேவனுடைய நீதியை நிறைவேற்ற வேண்டிய ஒரு பிரதிநிதி ரோ. 13:1-7

எந்த கட்சியின் நோக்கமும் அவர்களது கொள்கையும் கிறிஸ்துவின் போதனைக்கு எதிராக இல்லாதது வரை தேவனுக்கு முன்பாக நம் கணக்கு நன்மையானதாக இருக்கும்.

உயர் பதவியில் வரவேண்டும் என்பதற்காகவும் தனது கட்சியின் பதவிக்காகவும் தனது கட்சியில் ஆள் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் தேவசட்டத்திற்கு விரோதமாக சம தளத்தை உறுவாக்க நேரும் போது பூலோக பதவிக்காக பரலோக இடத்தை விட்டுகொடுக்க நேராமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம். (2கொரி. 6:15)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229 
   
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக