புதன், 25 செப்டம்பர், 2019

#503 - தசமபாகம் - மேலும் விளக்கப்படுகிறது

#503 - *தசமபாகத்தைக் குறித்து வேறொருவர் அளித்த பதிலின் அடிப்படையில் என்னிடம் வந்த கேள்வி -  முழுமையாக கேள்வியை படிக்கவும்*
 
புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?
பதில்: ஆம் ! தசமபாகம் (tithe) செலுத்தவேண்டும்.
முன்னோட்டமாக: தசமபாகம் என்றால் பத்தில் ஒரு பங்கு. தசம் என்றால் பத்து. (ஹிந்தியில் தஸ் என்றாலும் பத்து). கணிதத்தில் வரும் எண்களிலும் புள்ளி வரும் இடத்தை "தசம ஸ்தானம்" என்பர். தேவன் நமக்கு கொடுப்பதில் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு திரும்ப செலுத்தவேண்டும். புதிய ஏற்பாட்டில் தசமபாகத்தைக் குறித்து பற்றி பார்ப்போம்.

[A] தசமபாகம்:
[1] லூக்கா 11:42ல் இயேசு சொல்லும்போது: "பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டு விடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டு விடாதிருக்கவேண்டுமே".

இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும் என்பதில் தசமாகம்…
[3] அப்போஸ்தலனாகிய பவுல் மெல்கிசெதேக் பற்றி எபிரெயர் 7ல் சொல்லும்போது. ஆபிரகாம் இவனுக்கு "எல்லாவற்றிலும்" தசமபாகம் செலுத்தினான் என்று சொல்லுகிறான். நாம் நன்கு அறிவோம் பவுல் புதிய ஏற்பாட்டுகாலத்தை (கிறிஸ்து பிறந்த பின்பு வரும் காலத்தைச்) சேர்ந்தவர். பவுலின் காலத்திலும் தசமபாகம் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரிந்ததால் அதைக்குறித்து அவர் தைரியமாக எழுதுகிறார். இது பவுலுடைய காலத்தில் தசமபாகம் கொடுக்கும் பழக்கம் இருந்ததை உறுதிசெய்கிறது.

மல்கியா 3:8-10ல் "மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".

தேவனையே சோதித்துப் பாருங்கள் என்று இந்த ஒரே ஒரு விஷயத்தில்தான் பைபிளில் உள்ளது. எனவே தசமபாகம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் அப்படி நீங்கள் கொடுக்காவிட்டால், வீண்செலவுகள் மருத்துவர் செலவு, வாகனச் செலவு ... என்று வரும். ஏனெனில் நீங்கள் தேவனுடைய பணத்தை திருடிய குற்றவாளிகள் ஆகிறீர்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட விளக்கம். மேலும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாமல் காணப்படும்.

Priase the lord சகோதரரே நான் மேலே குறிப்பிட்ட அந்த தசம காணிக்கைக்குறிய நல்ல பதில் கிடைக்குமா?

*எனது பதில்*
தசமபாகத்தை *இஸ்ரவேலர்கள் லேவியர் கையில் கொடுக்க வேண்டும்* என்பது மோசேயின் மூலம் தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த பழைய பிரமாணம் (எபி. 7:5)

கிறிஸ்து வாழ்ந்த காலம் புதிய ஏற்பாட்டு காலம் அல்ல. (மத். 5:17)
கிறிஸ்து வாழ்ந்த காலம் நியாயபிரமாண காலம். அவரின் சிலுவை மரணத்திற்கு பின்னர் தான் புதிய உடன்படிக்கை சட்டம் நடைமுறையில் வந்தது. (எபி. 9:16-17)

அதாவது அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் தான் புதிய ஏற்பாட்டு காலம் துவங்குகிறது.

தசம பாகம் என்ற ஒன்று சட்டமாக கொடுக்கப்படாத காலத்திலேயே ஆபிரகாமும் யாக்கோபும் 10ல் ஒன்றை கொடுத்தனர் (ஆதி. 14:20, 28:22).

இந்த காலத்தில் அதை விட நாம் அதிகம் கொடுக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

2கொரி. 9:7 விசனமாயுமல்ல *கட்டாயமாயுமல்ல* தன் மனதில் நியமித்தபடியே கொடுக்ககடவன் *உற்சாகமாய்* கொடுப்பவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார் !!

2கொரி. 8:2 மிகுந்த *உதாரத்துவமாய்* கொடுத்தார்கள்

2கொரி. 8:3 *திராணிக்கு மிஞ்சியும்* கொடுத்தார்கள்.

தசமபாகம் புதிய ஏற்பாட்டில் கிடையாது என்று சொல்லிக்கொண்டு 10ல் ஒன்று கூட கொடுக்காமல் பிசினித்தனம் பண்ணுகிறவர்களை என்ன சொல்வது?

அதே சமயம் தசமபாகம் கொடுங்கள் என்று வற்புறுத்தி பயமுறுத்தி தன் சபையாரிடம் வாங்குகிற ஊழியர்கள் தங்கள் வருமானத்தில் வரும் 10ல் ஒன்றை யாருக்கு கொடுக்கிறார்கள்? தசமபாகத்தை வலியுறுத்துவது / கட்டாயபடுத்துவது புதிய ஏற்பாட்டு சட்டத்தின் படி தவறு.

10ல் ஒன்று அல்ல அதை காட்டிலும் மேலானதாக உதாரத்துவமாக மனப்பூர்வமாக சபை வளர்ச்சிக்கென்று கொடுக்க வேண்டும்.

தசமபாகம் என்ற முறை இஸ்ரவேலருக்கு பழைய முறைமையில் சொல்லப்பட்ட கட்டளை. அந்த முறையில் லேவிய குலத்து ஆசரியரிடம் தான் கொடுக்க வேண்டும்(எபி. 9:16-17). இப்போது லேவிய குலம் யாரும் இல்லை !! அந்த முறையும் இப்போது முடிவுக்கு வந்து விட்டது (ரோ. 10:4)

நாமனைவரும் ஆசாரியர்கள் (1பேதுரு 2:9)
கிறிஸ்து நமக்கு பிரதான ஆசாரியர் (எபி. 5:5)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக