வெள்ளி, 20 செப்டம்பர், 2019

#485 - எது விக்கிரகம் ?

#485 - *எது விக்கிரகம்?* வேதாகமத்தில் குறிப்பிடப்படும் வேற்றுத்தெய்வங்களின் விக்கிரகங்கள் சில.. இவை கற்பனை தெய்வங்கள்.. உண்மையில் வாழ்ந்தவைகள் அல்ல... இவற்றை கடவுளாக வழிபட்டால் அதுதான் விக்கிரக வழிபாடு..

தேவன் கட்டளையிட்டு செய்யப்பட்ட கேருபின்களை விக்கிரகம் என புரட்டஸ்தாந்து, பெந்தக்கோஸ்த் பாஸ்டர்கள் சொல்வதானது நம் கடவுளை விக்கிரகத்தை உருவாக்குபவராக காட்டிவிடுகிறது...

எது உண்மையில் விக்கிரகம்? எது உண்மையில் சிலை வழிபாடு என்பதை அறிந்து கொள்ளுங்கள்..

என் ஆண்டவர் இயேசு கற்பனை தெய்வமும் அல்ல.. வரலாற்றில் மனித உருவில் வாழாதவரும் அல்ல... பைபிளை மீண்டும் படியுங்கள்...

இந்த பதிவை ஒரு குழுவில் நான் வாசித்தேன் விளக்கவும்.

*பதில்*
கேரூபீன்களை வணங்கும் படி தேவன் சொல்லவில்லையே !!

ஆசரிப்பு கூடாரத்தில் ஆராதனையானது தேவன் ஒருவருக்கு மாத்திரமே உரியது.

பாம்பு கடித்த யாரும் சாகாதபடிக்கு வெண்கலத்தால் ஒரு கொள்ளிவாய் சர்பத்தை செய்து உயரத்தில் ஒரு கம்பத்தில் கட்டி வைக்கும்படி மோசேயிடம் சொன்னார் தேவன். சர்ப்பத்தை பார்த்த யாவரும் பிழைத்தார்கள் (எண். 21:6-9)

ஆனால் காலம் சென்ற போது அந்த சர்ப்பத்தை சில இஸ்ரவேலர் வணங்க ஆரம்பித்தார்கள் தேவனை விட இதற்கு முக்கியத்துவம் கொடுத்த போது இதை விக்கிரகமாக்கினார்கள் தேவனுக்கு விரோதமான காரியம் என்றறிந்து எசேக்கியா இராஜா அதை உடைத்து தூளாக்கி போட்டான் (2இரா. 18:4)

கேரூபீன்களோ எகிப்தின் விக்கிரகங்களோ அல்லது எந்த நாட்டின் விக்கிரகங்களோ எதுவும் உண்மையான கடவுளுக்கு ஒப்பாகாது.

*விக்கிரகம் என்றால் என்ன*?
எதையும் கடவுளுக்கு ஒப்பாக நினைத்தால் அது விக்கிரகம். அவருக்கு ஒப்பாக நாம் எதையும் செய்யகூடாது  -  (யாத். 20:23)

தேவனை விட அதிகமாக எதை நாம் நேசிக்கும் / விரும்பும் பட்சத்தில் விக்கிரகமாக்கி விடுகிறோம்.  

உதாரணத்திற்கு பணத்தின் மீதான நாட்டம் - விக்கிரகத்திற்கு சமம். கொலோசெயர் 3: 5

சுமார் 300ம் ஆண்டில் ஒரு ஓவியர் கற்பனையாக வரைந்த படத்தை இயேசு என்றோ அவரின் தாயாரான மரியாளை போன்றோ சீஷர்களை போன்றோ, கேரூபீன்களை போன்றோ சேராபீன்களை போன்றோ எகிப்திய தெய்வங்களை போன்றோ இந்திய தெய்வங்களை போன்றோ வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்களை போன்றோ அனைத்தும் விக்கிரகங்கள் தான். இயேசு என்று சொல்லி அந்த சிலைக்கு முன்பாக கும்பிட்டாலும் அவரின் மரியாதைக்குரிய தாய் என்று மரியாளை போன்ற சிலையை வழிபட்டாலும் சிலுவையை வழிபட்டாலும் - தேவன் அவனை கண்டிக்கிறார் (யாத். 20:5)

அவை மனிதனின் கைகளின் படைப்புகள் - உபாகமம் 4:28

இந்த உலக விஷயங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது - ரோமர் 1: 22-23

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக