வெள்ளி, 20 செப்டம்பர், 2019

#484 - பரிசுத்த ஆவியானவரை நோக்கியும் நாம் பாடல்களை பாடலாமா?

#484 - *பரிசுத்த ஆவியானவரை நோக்கியும் நாம் பாடல்களை பாடலாமா?*

*பதில்*
தேவனை துதித்துப் பாடுவது ஆராதனையின் / தொழுகையின் ஒரு பகுதி
(எபி. 13:15, 3:13, கொலோ. 3:16, 1கொரி. 14:15, எபே. 5:19, சங். 19:14)

மேலும் ஆராதனை / தொழுகை என்பது தேவனுக்கே (உரியது) சொந்தமான ஒன்று.

.. “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக” (லூக்கா 4: 8).

மனிதர்களையோ தேவதூதர்களையோ நாம் வணங்குவதில்லை, ஏனென்றால் அவர்கள் கடவுள் அல்ல.

ஆனால் பரிசுத்த ஆவியானவர் தேவன். (விவரங்களுக்கு "#327ற்காக பதிலை நம் வலைதளத்தில் படிக்கவும்)

தேவனாகிய அவர் பிதாவும் குமாரனையும் போலவே நம்முடைய புகழுக்கும் தொழுகைக்கும் தகுதியானவர்.

பேதுரு பரிசுத்த ஆவியானவரை "மகிமையின் ஆவியானவர்" என்று குறிப்பிடுகிறார் (I பேதுரு 4:14).

ஆவியானவர் நம்முடைய ஜெபங்களிலும் நம்முடைய இரட்சிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.  அவருக்குரிய கனத்தை நாம் அவருக்கு செலுத்தவேண்டும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக