வெள்ளி, 20 செப்டம்பர், 2019

#480 - சுவிசேஷம் அறிவிக்கும் போது அதை ஏற்காமல் எதிராக பேசும் மறுக்கும் மனிதர்களிடம் எப்படி அன்பு செலுத்துவது..

#480 - *சுவிசேஷம் அறிவிக்கும் போது அதை ஏற்காமல் எதிராக பேசும் மறுக்கும் மனிதர்களிடம் எப்படி அன்பு செலுத்துவது?* சுவிசேஷம் என்பது மீட்பை தரும் என்று தெரிந்தும் கீழ்படிய முடியாவர்களுக்கு எப்படி நற்செய்தி பனி புரிவது.. சில நேரங்களில் இப்படியான தருணங்களில் கோபம் வந்து அவர்களை வெறுத்து விடும் நேரங்களில் குற்றவுணர்வு அடைகிறேன் ஆலோசனை வேதத்தின் வசனம்படி வேண்டும்.

*பதில்* :
கடந்த காலத்தை விட தற்போது உள்ள 2019 உண்மையாகவே சுவிசேஷம் செல்லும் வாசல்கள் அடைக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் உணர்கிறோம்.

சுவிசேஷத்தை எதிர்ப்பவர்களின் மூலகாரணங்கள்:
1-பொறாமையினால் நம்மை எதிர்ப்பவர்கள் உண்டு (மாற்கு 6:14-16)

2-தன் பாவம் சுட்டிக்காட்டப்படுவதால் எதிர்ப்பவர் உண்டு (மாற்கு 6:17-19)

3-தேவ மனிதர்கள் என்பதை அறிந்ததால் பயத்தால் சிலர் எதிர்பார்கள் (மாற்கு 6:20)

4-சிலர் தன் சொந்த காரணங்களால் எதிர்ப்பார்கள் (மாற்கு 6:24)

5-தங்கள் சமுதாய நிலமையின் நிமித்தம் சிலர் எதிர்ப்பர் (மாற்கு 6:26)

நாம் மகத்துவமான தேவனுடைய செய்தியை சொல்கிறோம் என்ற அதிகாரத்தை உணரும் போது – எதிர்ப்புகளை காட்டிலும் நமக்கு இன்னும் உத்வேகம் வரும் (2தீமோ 4:1)

அவர்களிடம் சத்தியத்தை எடுத்துச்சென்ற போது நாம் துன்புறுத்தப்பட்டால் – அப்படி ஒரு பாக்யத்தை தேவன் நமக்கு தந்தது பொிய கிருபையே... ஆம் வசனத்தை பார்க்கவும் :

மத் 5:10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

மத் 5:11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

மத் 5:12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

2தீமோ 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

நாம் பூமிக்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறோம் (மத் 5:13-14)

இருளில் இருப்பவர்கள் – வெளிச்சத்தை விரும்பமாட்டார்கள் (ரோ 13:12-14; எபே 5:8, 14-15; 1தெச 5:5-8)

நிந்திக்கப்படலாம், துன்புறுத்தப்படலாம், அவமானப்படலாம் இவை எல்லாவற்றையும் நாம் பெறும் போது தேவனுடைய அநுக்கிரகம் நம்மை இன்னும் அதிகமாக அவரிடம் சேர்க்கிறது என்று உணரும் போது அவர்கள் மீது நமக்கு கோபம் வராமல் தேவனுடைய கிருபையை நாம் இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் உதவுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களை சிநேகிப்போம் (1பேது 1:6-9, 2தீமோ 3:11-12)

 *எடி ஜோயல் சில்ஸ்பி*
 ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக