புதன், 18 செப்டம்பர், 2019

#476 - மதமாற்று சட்டம் நல்லதுதானா? அல்லது தவறானதா?

#476 - *மதமாற்று சட்டம் நல்லதுதானா? அல்லது தவறானதா?*

தவறானது என்றால் கிறிஸ்துவம் மதமா? 🤔தவறானது இல்லை என்றால் நாம் இந்த சட்டத்தை ஆதரிக்கலாமா?😒

மத்தேயு:5:37 - உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.

உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்!!! கர்த்தர் நல்லவர்

*பதில்* :
அரசாங்கத்தின் பார்வையில் பொதுவாக அனைத்து பிரிவுகளையும் மதம் என்றே அழைப்பதால் – மதம் என்ற இந்த பதத்தை பொதுவானதாக கருத வேண்டியுள்ளது.

அர்த்தத்தின் அடிப்படையில் *கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல*.
பரலோகத்திற்கு போகும் வழியை தெரிவிப்பதால் கிறிஸ்தவம் *மார்க்கம்* என்று வேதம் அழைக்கிறது (அப் 9:2, 22:4)

தன் குழந்தை என்பதை அறிந்த தாய் எந்த சூழ்நிலையிலும் போராடுவது போல (2இரா. 3:26) – கடவுள் / பரலோகம் / இரட்சிப்பு என்ற உண்மையை தீர்க்கமாகவும் சரியாகவும் புரிந்தவர் எவரும் பின்வாங்கவேமாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும் அதற்காக போராடி சத்தியத்தில் நிலைநிற்பார்கள்.

உண்மையில் ஒருவர் கிறிஸ்துவை புரிந்து / அறிந்து கொண்டால் அரசாங்கத்தில் நேரடியாக போய் தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறேன் அதற்கான அனுமதி தாருங்கள் என்று தைரியமாக கேட்பார்.

ஆனால்,
சுகத்திற்காக, நன்மைக்காக, அங்கீகாரத்திற்காக, ஜாதி மாறுகிறேன் என்ற நம்பிக்கையிலும், வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளவும், கிறிஸ்தவ காலேஜில் இடம் வாங்கவும், சலுகைகள் பெறவும், மாத வசூல் வேட்டை செய்யலாம் என்றும், நல்ல காணிக்கை பிசினஸ் நடக்கிறது என்ற பொய்யான நம்பிக்கையிலும் பிரபலமாவதற்காக எவர் ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும் *உலகம் ஒருவேளை அவர்களை அங்கீகரிக்கலாம். ஆனால் தேவனோ தன் வார்த்தையின்படி இரட்சிக்கப்பட்டார்களா என்பதை தான் பார்ப்பார்*. யோ. 12:48

இந்த பூலோக அரசாங்கம் அங்கீகரிக்கிறதோ இல்லையோ பரலோகம் அங்கீகரிப்பதே முக்கியம்.

அரசாங்க கட்டளைக்கு நாம் கீழ்படிய வேண்டும் அவசியம். (தீத்து 3:1-2)

கிறிஸ்தவனாக மாறக் கூடாது என்று அரசாங்கம் சொல்லவில்லையே.
அதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவேண்டும் என்பதை தான் வலியுறுத்துகிறார்கள்.
1949 இந்திய அரசியலமைப்பில் பிரிவு 25ன்படி ஒவ்வொரு பிரஜையும் தனது தெரிந்தெடுத்தலை பின்பற்ற அவரவர்களுக்கு உரிமையுண்டு.

உண்மையான கிறிஸ்தவன் தனது உரிமைக்காக போராடுவான். அதில் நிலைநிற்பான்.

உண்மையாகவே கிறிஸ்தவ மதத்திற்கு அல்ல கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வருபவர்;
ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை கூடத்தில் கிறிஸ்தவராகவும் மற்ற இடங்களில் உலக வேஷம் போட்டு அவர்களது அடையாளத்தோடும் மற்ற சகல வேத விரோத காரியத்திலும் ஈடுபட்டுத் வேஷம் போடமாட்டார்கள்.

இப்படிப்பட்ட வேஷம் இதில் கலைந்து போகும் போது என்னை பொறுத்த வரை நல்லது என்றே சொல்லுவேன்.

எத்தனை தடைவந்தாலும் சரியான கிறிஸ்தவன் நிச்சயம் பிரகாசிப்பான் !!

கிறிஸ்தவத்தை எவரும் அழிக்க முடியாது. மத். 16:18

கிறிஸ்தவத்திற்கு விரோதமாக எழும்பிய ரோம சாம்ராஜ்யமே அழிந்தது சரித்திரம்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக