புதன், 18 செப்டம்பர், 2019

#474 - இன்றைய ஊழியக்காரர்கள், இயேசுவின் நாமத்தை தறித்து கொண்டு ஊழியம் என்ற பெயரில் வெளிநாட்டு பணத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள் இதில் பொய் சத்தியமெல்லாம் செய்கிறாரகள் இவர்களைபற்றி வேதத்தின் அடிப்படையில் விளக்கம்?

#474 - *இன்றைய  ஊழியக்காரர்கள், இயேசுவின் நாமத்தை தறித்து கொண்டு ஊழியம் என்ற பெயரில் வெளிநாட்டு பணத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள் இதில் பொய் சத்தியமெல்லாம் செய்கிறார்கள் இவர்களைபற்றி வேதத்தின் அடிப்படையில் விளக்கவும்.

*பதில்* :
தேவனுக்கு ஊழியம் செய்கிறேன் என்று தவறான நோக்கத்தில் அப்போஸ்தலர் வாழ்ந்த காலத்திலேயே இருந்தார்கள். அவர்களுக்கு பணம் அல்லது புகழ் பெறுவதே குறிக்கோளாக இருந்தது. (2தீமோ. 3:8, தீத்து 1:11)

ஊழியம் செய்பவர்கள் ஜனங்களை தேவனுக்கு சீஷராக்காமல் – தங்களுடைய ரசிகர்களாக மாற்றப்படுவதை அறிந்தோ அறியாமலோ இருப்பது வேதனைக்குறியது.

யோவான் ஸ்நானகனை பின்பற்றினவர்கள் இயேசுவைக் கண்டதும் அவரை பின்பற்றினது இந்த கால ஊழியர்களுக்கு பெரிய பாடம் (யோ. 1:36-37)

நீங்கள் சொல்வது போல வெளிநாட்டு பணத்திற்காக ஊழியம் செய்யும் ஒரு கூட்டம் இருந்தாலும், தங்கள் சொந்த வேலையையும் விட்டு அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட என்ன வழி என்று யோசிக்காமல் கஷ்டத்தோடும் வருத்தத்தோடும் ஆத்தும பாரத்தோடும் சுவிசேஷத்தை அறிவிக்கிற அநேக அநேக ஊழியர்களை நான் அறிவேன்.

சுற்றிலும் இருப்பவர்கள் எல்லாரும் அப்படியே கண்ணில் தென்பட்டால் நாம் இருக்கும் இடத்தை யோசிக்கவேண்டும் !!

இவர்களை பார்த்து இரட்சிப்பை இழந்து விடவேண்டாம்.

இயேசு கிறிஸ்து வருவது சத்தியம். அப் 1:11

அவர் வரும்போது வேதாகமத்தின் படி ஒவ்வொருவரையும் நியாயந்தீர்ப்பது சத்தியம். 2தெச. 1:7

நம்மை நாமே நிதானித்து வசனத்திற்கேற்றபடி வாழ்வது அவசியம். யாக். 2:12

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக