#465 *கேள்வி* நாம் ஜெபம் செய்யும் போது: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இம்மூவரின் பெயரையும் சொல்லி
ஜெபிக்கலாமா?
எவருடைய பெயரில் எப்படி ஜெபிக்க வேண்டும்? எவ்வாறான ஜெபம் ஏற்றுக்கொள்ளப்படும்? எவ்வாறான ஜெபம் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை?
வேதத்தின்படி விளக்கம் தாருங்கள்
*பதில்*
:
பரமண்டங்களிலிருக்கும் எங்கள் பிதாவே
என்று பிதாவை நோக்கி ஜெபிக்கும்படி கிறிஸ்துவானவர் கற்றுக்கொடுத்தார் (மத். 6:9)
நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன் - என்னாலேயன்றி
ஒருவரும் பிதாவினிடத்தில் வரான் என்றார் இயேசு கிறிஸ்து. (யோ. 14:6)
இந்த பொருளை / காரியத்தை /வார்த்தைகளை
அறிந்தோ அறியாமலோ எல்லாரும் ஜெபத்தை பிதாவே என்று ஆரம்பித்து இயேசுவின் மூலம்
ஜெபத்தை முடிப்பார்கள். ஆனால் நடுவே என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியாமல்
இருப்பது தான் வேதனை !!
கிறிஸ்துவின் *மூலமாக பிதாவினிடத்தில்* ஜெபிக்கிறோம். ஆகவே ஆண்டவரே கர்த்தாவே
என்று ஜெபத்தில் உபயோகப்படுத்தினால்
– அது கிறிஸ்துவை நோக்கி ஜெபிப்பதாகும்
என்பதை அவர்கள் உணர்வதில்லை (அப். 2:36, பிலி. 2:11, (எபி. 4:14-18, கொலோ. 3:17, யோ. 14:6, 14).
ஜெபம் என்பது தேவனோடு தொடர்பு கொள்ளுவது (பிலி. 4:6)
நம்மோடு தம் வார்த்தையின் மூலமாக தேவன் தொடர்பு கொள்கிறார் (எபி. 1:1-2)
கிறிஸ்தவனுடைய அத்தியாவசியமான அநுதின கடமை ஜெபிப்பது (1தெச. 5:17)
கூடுகையில்
ஜெபம் இன்றியமையாதது (அப். 12:5, 12)
கீழ்கண்டவற்றிற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்று
கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெலவீனத்தாலும்
அறியாமலும் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கோரி ஜெபிக்கவேண்டும் (அப். 8:18-24, I யோ. 1:9).
அர்ப்பணித்தும்
தேவனை துதித்தும் ஜெபிக்க வேண்டும் (மத். 6:9)
தேவன் தந்த
எண்ணிமுடியாத ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்க வேண்டும் (எபே. 5:20)
நன்கு புரிந்து
கொள்ளும் ஆற்றல் வேண்டி ஜெபிக்க வேண்டும்
(யாக். 1:5)
கிறிஸ்தவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும்
அதிகாரிகளுக்காகவும், நம் எதிரிகளுக்காகவும் ஜெபிக்க
வேண்டும் (எபே. 6:18, I தீமோ. 2:1-2, மத்.
5:44)
சோதனையிலிருந்து
நாம் விடுபட (மத். 26:41, யாக். 1:13, 1கொரி. 10:13)
தேவனை நம்பும்
அனைவரின் மத்தியிலும் நல்ல ஐக்கியம் பெலப்பட (யோ. 17:20-21)
நம் அநுதின
தேவைக்காக ஜெபிக்க வேண்டும் (மத். 6:11)
தேவனுடைய
சித்தப்படி நாம் ஜெபிக்கும் போது அதை பெற்றுக்கொள்கிறோம் (மத். 7:7-11, 21:22, 1யோ. 5:14)
பிதாவின் சித்தத்தின் படி செய்யாமல்
கர்த்தரை நோக்கி கூப்பிட்டால் ஒன்றும் நடக்காது என்று கிறிஸ்துவே சொல்லியிருக்கும்
போது நாம் ஜெபத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
வேத அறிவு ஒன்றும் இல்லாமல் தங்களை
தாழ்த்தி பயந்து நடுங்கி வெறுமனே இயேசுவே கடவுளே என்று நம்பிக்கையோடு இருதயத்தை
ஊற்றி வேதனையில் ஏறெடுக்கும் ஜெபங்கள் தனி சிறப்பானவை (லூக்கா 18:13, பிலி. 3:16)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக