சனி, 14 செப்டம்பர், 2019

#464 - இந்த ஆதாமை சர்ப்பமாகிய சாத்தான் வஞ்சிக்காமல் ஏன் ஏவாளை வஞ்சித்து?

#464 -*இந்த ஆதாமை  சர்ப்பமாகிய சாத்தான் வஞ்சிக்காமல் ஏன் ஏவாளை வஞ்சித்து?*
 
தேவன் முதல் சிருஷ்டித்த மனிதன்  ஆதாம். இந்த ஆதாமை சர்ப்பமாகிய சாத்தான் வஞ்சிக்காமல் ஏன் ஆதாமின் வில எலும்பில் இருந்து சிருஷ்டிக்கப்பட்ட ஏவாளிடம் பேசி  ஏவாளை வஞ்சித்து.. முழு உலக ஜனங்களையும் பாவத்தில் விழ செய்தான்... விளக்கவும்..

*பதில்* :
பெண்கள் பெலவீனமுள்ளவர்கள் என்பது நாம் உணருகிறோமோ இல்லையோ பிசாசுக்கு நன்றாக தெரிந்ததாலோ என்னவோ இப்படி நடந்திருக்கலாம். (1பேதுரு 3:7) அதற்கான வேறே காரணத்தை வேதாகமத்தில் காணவில்லை.

அதே வேளையில் ஆதாமிடத்தில் அவன் முயற்சி செய்து ஆதாமும் தேவனுடைய வார்த்தையை முதலாவது மீறியிருந்தாலும் தண்டனை கிடைப்பதில் நிச்சயம் சலுகை இருந்திருக்காது.

இருவரும் புசித்த பின்பு கண்கள் திறந்தன (ஆதி. 3:6-7)

மேலும் அந்த கனியை புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது ஏவாளிடத்தில் அல்ல ஆதாமிடத்தில் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (ஆதி. 2:16-18)

வேதத்தில் எங்கும் ஆதாமின் மீறுதல் என்றே வருவதின் மூலம் ஏவாளின் (மனைவியின்) பாவத்திற்கு ஆதாம் (கணவன்) தான் உத்திரவாதி என்பதை அறியவேண்டும் ஓசியா 6:7, ரோ. 6:12-14, 1கொரி. 15:22

யார் தேவனுடைய வார்த்தையை மீறினாலும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது (எபி. 2:4)

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக